காலை நேரம் சூரிய கதிர் மெல்ல எழுந்து தூங்குவோரை எழுப்பிவிட்டு அதன் ஒளியை வேகமாகப் பரப்புகிறது, மக்கள் கூட்டம் மெல்ல நடைபோட, மெல்லிய பனிக் கூட்டம் மறைய பால்காரன் வரிசையாக எல்லா வீட்டிலும் பால் பாக்கெட்டை தூக்கி போட திடீரென ஒரு வீட்டிலிருந்து
“போடா வாங்கி தர முடியாது”
“நீங்க வாங்கி தராம நான் காலேஜிக்கு போக மாட்டேன்”
“போடா நீ படிக்கிலன்ன எனக்கு என்ன”
“அம்மா இங்க பாரும்மா காலேஜிக்கு சேரும்போதே கேட்டேன் வாங்கித் தரல”
“டேய் இன்னைக்கு போடா நான் அப்பாகிட்ட பேசி வாங்கித்தர சொல்றேன்”
“அம்மா ‘பைக்’ வாங்கி தராம நான் காலேஜ் போக மாட்டேன்”
“டேய் வருண் போகாதடா நான் அப்பாகிட்ட பேசுறேன்”
“போமா...”
என்று சொல்லிக் கொண்டே வருண் வீட்டின் கேட்டை வேகமாக இழுத்து அடித்து சாத்தி விட்டு வேளியே வருகிறான்.
அப்பா அம்மா மேல் உள்ள கோபத்தில் வேளியே நடந்து வருகிறான் வருண் அப்போதுதான் ஒருவன் மஞ்சல் நிற அப்பாச்சி பைக்கை வேகமாக திருவிக்கொண்டு ஓட்டிச் செல்கிறான், அதை பார்த்த ‘வருண்' ஏக்கத்துடன் நமக்கு ‘பைக்’ இல்லையே என்ற சோகத்துடன், அப்பா, அம்மா மேல் கோபத்தில் இருக்கிறான்.
சோகத்துடன் பக்கத்தில் இருக்கும் 'ராஜா' டீ கடை மதிலுக்கு நடந்து செல்கிறான்.
வருண் அப்பா ‘ராஜேந்திரன்’ ஒரு சூப்பர் மார்கெட்டில் வேலை செய்பவர், வருண் அம்மா வீட்டிலே இருப்பவர், இவர்களுக்கு மூன்று மகள்கள் ஒரே மகன் 'வருண்' இவர்கள் ஏழையாக இருந்தாலும் இவனை வசதியான நிலையில் மேல் படிப்பு படிக்க வைத்து வருகிறார்கள்.
வருண் டீ கடை மதிலுக்கு நடந்து வருகிறான் அப்போது டீ கடையிலிருந்து
“தம்பி வருண் என்ன இன்னைக்கு நீ மட்டும் தனியா இவ்வளவு சீக்கரமா வந்திருக்க”
“வருவாணுங்கண்ணா...! நான் கொஞ்சம் முன்னாடியே வந்திட்டேன்”
“அதுக்கு ஏம்ப்பா இவ்வளவு கோபமா சொல்ற”
என்று கேட்டதும் முகத்தை சுழித்துக் கொண்டு அந்த பக்கம் திரும்புகிறான். சிறுது தூரத்தில் வருண் +2 நண்பன் ‘பழனி’ நடந்து வருகிறான், பழனி வருண் தனியாக அமர்ந்திருப்பதை பாத்து விட்டு
“டேய் வருண் எப்படி இருக்க”
“டேய் பழனி ரொம்ப நாளாச்சி பாத்து எங்கடா போன”
“கேட்ரிங் வேலை பாத்துகிட்டு இருக்கேன்ல ஓனர் வேலைக்கு வெளியூர் கூட்டிட்டு போய்ட்டார்... டா”
“டேய் பழனி வேலைக்கு போரல்ல ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிப்ப”
“இம்... 400ரூபாய் சம்பாதிப்பன்டா”
“அப்படியா...!?”
“ஏன்டா அதையல்லாம் கேட்டுக்கிட்டு இருக்க”
“ஓன்னும் இல்ல டா”
சிறிது நேரம் யோசித்து
“இல்லாடா நானும் வேலைக்கு வரவா”
“ஏன்டா படிக்கும் போது வேலைக்கு வரன்னு சொல்ற”
“இல்லடா இன்னைக்கு சனி, ஞாயறு காலேஜிக்கு விடுமுறை தான் அதான்டா சொன்னேன்”
“சரிடா வேலை ரொம்பவும் கஷ்டமா இருக்கும் டா”
“பரவாயில்ல நான் பாத்துக்கிறேன் டா”
"வேலை இருக்கு ஆனா கல்யாணமண்டபத்தில் தான் "
“அப்பறம் என்ன”
“இல்லடா எப்போதையும் விட வேலை கொஞ்சம் கஷ்டமா இருக்கும்டா”
“டேய் பாத்துக்கலாம்டா”
என்று பழனியின் தோலில் கை போட்டுக் கொண்டு நக்கலாக நடந்த படி
“வாடா போகலாம்”
சொல்லிக் கொண்டே நடக்க ஆரம்பிக்கிறான் அப்படியே மெல்ல பழனியிடம்
“டேய் பழனி எனக்கு ஒரு நாளைக்கு சம்பளம் எவ்வளவுடா”
“டேய் சம்பளம் தானே உனக்கு 300ரூபாய் வாங்கி தரண்டா”
“ok..ok”
என்று ஜாலியாக நடந்து வருகிறான். இருவரும் தியாகராய நகரில் பேருந்துக்காக காத்திருக்க மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது .அங்காங்கே பலர் கையில் டிபன் கூடையுடன் ஓடி பேருந்தில் ஏறுவதும், சிலர் தோலில் பேக் மாட்டிக் கொண்டும் ஆங்காங்கே நடப்பதும் , இவர்கள் நிற்கும் இடத்தை ஒட்டியவாரு அண்ணா நகர் ரவுண்டானம் என்று போர்டு வைக்கப்பட்ட ஷேர் ஆட்டோகள் வந்து நின்று
“அண்ணாநகர்... அண்ணாநகர்...”
என்று சொல்லி ஆட்டகளை ஏற்றிக் கொண்டு செல்கிறார்கள்.
வருண் பழனியிடம்
“டேய் பழனி எங்கடா போறோம்”
“வடபழனி டா”
“வடபழனி தானா” என்று சலித்துக் கொண்டான்.
பேருந்துக்காக காத்திருக்க, ரோட்டில் பேருந்து, கார், பைக் மக்கள் கூட்டம் என தியாகராயாநகர் ரோட்டை அடைத்துக் கொண்டு செல்கிறது.
இருவர்களுக்கான பேருந்து ‘27c’ மக்கள் கூட்டத்துடன் படியில் கூட்டம் தொங்கியபடி வருகிறது. பழனி ஓடிக் கொண்டே
“டேய் வருண் ஏறுடா”
“நான் ஏறுகிறேன் நீ ஏறுடா”
“டேய் சரி டா நீ மேல ஏறி வந்திடு”
என்று பழனி சொல்லிக் கொண்டே பேருந்தில் ஏறுகிறான்.
வருண் பேருந்தின் படிக்கட்டிலேயே நிற்க பழனி பேருந்தின் உள்ளே சென்று கன்டக்டரிடம் டிக்கெட் எடுக்கிறான்.
“அண்ணா இரண்டு வடபழனி கொடுங்க”
என்று டிக்கெட் வாங்குகிறான். வருண் படியில் நின்றுக் கொண்டு பேருந்தில் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணை பார்த்துக் கொண்டிருக்கிறான், அந்தப் பெண்ணும் அவனை பார்க்க வருண் உடனே ஒரு கையால் பேருந்தில் தொங்கிக் கொண்டும் ஒரு கையால் தலை முடியை சரிபண்ணிக் கொண்டு
“டேய் பழனி வடபழனியில தானே இறங்குறோம்”
“ஆமாடா அதத்தான் நான் தி-நகர்லேயே சொன்னேனேடா”
“சரி...சரி... டா”
என்கிறான் வருண். அந்த பெண்ணிடம் பெயரை சொல்லியிருக்கான் அந்த பெண்ணும் அவன் பெயரைக் கேட்டதும் அவனைப் பார்த்து சிரிக்கிறது. பழனி அவன் அந்தப் பெண்ணை பார்த்துக் கொண்டு பேருந்து படியில் தொங்குவதைப் பார்த்து
“டேய் வருண் மேல ஏறி வாடா”
“நான் பாத்துக்குறேன் டா”
சிறிது தூரத்தில் வடபழனி சிக்னல் வந்துவிட பேருந்து நின்று அனைவரும் இறங்கிச் செல்கிறார்கள். வருண் மட்டும் இறங்கி நின்று அந்தப் பெண்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.
அந்த பெண்ணும் வருணையே பார்த்துக் கொண்டிருக்கிறது, அதை பார்த்த பழனி வருணுக்கு பின்பக்கமாக வந்து நின்று அவன் பார்ப்பதை கவனித்தபடி
“டேய் வருண்...”
“என்ன டா...”
“வருண் போகனும் டா”
“இருடா...”
“டேய் நேரம் ஆச்சிடா”
என்று சொல்லிக் கொண்டு இருக்க, சிக்னல் கிரீன் விழுந்து பேருந்து மெல்ல நகர்ந்து செல்ல... வருணும் பேருந்தையே பார்க்கிறான். பேருந்தில் இருக்கும் பெண்ணும் வருணையே பார்க்கிறது...
பழனி மீண்டும்
தொடரும்...
ஹாய் கமல் கதை படித்தேன்....
ReplyDeleteகதை நன்றாக நகர்கிறது...
தொடர்ந்து எழுதுங்கள்...
வாழ்த்துக்கள்...
சாம்.
நன்றி சாம் வருகைக்கு நன்றி தொடர்ந்து எழுதுகிறேன் தொடர்ந்து படியுங்கள்
ReplyDeleteஅருமை நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்
ReplyDeleteநன்றி நண்பரே தொடர்ந்து எழுதுகிறேன்
ReplyDeleteஅருமை நண்பரே தொடருங்கள்...
ReplyDeleteநல்லா எழுதியிருக்கீங்க கமல்.. நல்லாயிருக்கு.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteநன்றி பிரியமுடன் ரமேஷ் அவர்களே,நன்றி பதிவுலகில் பாபு அவர்களே
ReplyDelete