Monday, October 18, 2010

இரு திருமணம் பாகம் 4



                             பாகம் - 4


     பெண் வீட்டு ஐயர் ஒருவர் வருணை கூப்பிட்டுக் கொண்டு ‘லட்டு’ கூடையை

“இந்தாப்பா லட்டு கூடையை தூக்கிண்டு என் பின்னாடியே வா” என்றதும் வருண்

“சரிங்க...” என்று சொல்லி அவர் பின்னாடியே தூக்கிக் கொண்டு சிரித்த முகத்துடன் செல்கிறான். அப்போது திடீரெண சில அக்கரகார இளஞர்கள் வேகமாக வந்து அந்த ஐயர்ரிடம்

“மாமா நாங்கோ தூக்கிண்டு வறோம்”

என்று வருணை முறைத்துப் பார்த்தப்படி லட்டு கூடையை வருணிடமிருந்து வாங்கிக் கொண்டு வருணை வில்லனைப் பார்ப்பதுபோல் பார்த்து தூக்கிச் செல்கிறார்கள். வருண் அவர்கள் தூக்கிச் செல்வதையே பார்த்து சோகமாக முகம் சுழித்து திரும்புகிறான், அப்போது வேல் எதிரே வருகிறார் வருணைப் பார்த்துவுடன் கோபமாக

“என்ன, நீ லட்டு தூக்கிட்டு போவல இங்க நின்னுகிட்டு என்னடா...செய்ற” என்றதும் வருணுக்கு கோபம் வந்து

“இங்க பாருங்க...”

என்று கோபம்பட அங்கே பழனி வருகிறான் வருண் கோபமாக இருப்பதைப் பார்த்து அருகில் வந்து

“என்னடா வருண்”

“நாண் ஒண்னும் பண்ணலடா அவுங்கதான் நாங்க பாத்துக்குறோம்னு வாங்கிட்டு போய்ட்டாங்கடா” என்றதும் உடனே பழனி

“சரி... சரி... போடா போய் வேலையை பாருடா”

என்று கோபமாக திட்டி வருணை அனுப்பிவிட்டு பழனி வேல்லிடம்

“அண்ணா நான் பாத்துக்குறேணா” என்றதும் அவர் கோபமாக

“சரி... சரி... நீயும் போய் வேலையை பாரு”

என்று சொல்லி கீழே சென்று மாப்பளை வீட்டாரிடம்  பேசிக்கொண்டிருக்க, வருண் கோபமாக சென்று ஒரு இடத்தில் நின்றுக் கொண்டிருக்கிறான். அப்போது அந்த பெண் வருண் நிற்பதைப் பார்த்து அருகில் வந்து

“ஏங்க உங்களதான் உங்க பெயர் என்ன”

என்றதும் வருண் கோபமாக திரும்பி அவளை பார்த்து

“பெயரை கேட்டு என்னப் பண்ண போற வேலையைப்பாத்துக்கிட்டு போ...”

என்றதும் அந்த பெண் பயந்து அதிர்ச்சியாகி சோகத்துடன் திரும்பி செல்கிறாள். வருண் கோபமாக தலையை சொரிந்தப்படியே நிற்க்கிறான் அப்போது பழனி பின்பக்கமாக வந்து தோளில் கைவைத்து

“என்னடா அவர்கிட்ட போய்...”

“அவரு என்ன சொன்னாருனு தெரியுமா...”

“சரி விடுடா இன்னும் கொஞ்சம் நேரம் தானே”

என்று சொல்லி தோளில் கைபோட்டபடி சமயல் அறைக்குள் நடக்கிறார்கள் இவர்கள் மற்றும் அனைவரும் சேர்ந்து அனைத்து உணவுகளையும் பெரிய, பாத்திரத்தில் மேலே தூக்கிச் செல்கிறார்கள்.

மதிய உணவுக்காண சமயல் அனைத்தும் முடிந்து, உணவு உபசரிப்புக்கான வேலைகள் விருவிருப்பாக நடக்கிறது.

ஆறு வகை பொரியல், மூன்று வகைகூட்டு, அவியல், பருப்பு(நெய்), தயிர்பச்சடி, மாங்காய் ஊர்காய், அப்பளம், சிப்ஸ், மோர் மிளகா, வடை, சாம்பார், வத்தகுழம்பு, மோர்குழம்பு, ரசம், தயிர், மோர், புளியோதரை சாதம், கொத்தமல்லி சாதம்,  சாதம், வாழை பழம், என பல வகையான உணவுகளால்,, உபசரிப்பு நடக்கிறது.

வருண் அனைவருக்கும் சாப்பிட இலைப் போட்டுக்கொண்டிருக்கிறான், அப்போது ஒரு பெரியவர் “ இலை எப்படி போடனும்னு தெரியாது” என்று வேகமாக திட்டுகிறார்.

அதை கேட்ட வேல் அருகில் வந்து “ இலை போடுறது பெரிய விசியமே இல்ல இதோ பாரு அகலமா இருக்குற பக்கத்த சோத்து கைப்பக்கம் போடு குறுகியப்பக்கத்தை இடது கைப் பக்கம் போடு” என்கிறார்.

வருண் இலையை சரியாகப் போட்டுக்கொண்டிருக்கிறான். உணவு உபசரிப்பு இரண்டு மணி நேரத்துக்கு மேல் நடக்கிறது,

வருண், பழனி அருகில் வந்து “டேய் பழனி நான் பாத்ரூக்கு போய்ட்டு வறேன்டா”
என்றுச் சொல்லி சென்றுவிடுகிறான். பாத்ரூம்க்குச் சென்று அரைமணி நேரம் ஆகிறது, வருண் வரவில்லை, ஒருமணி நேரம் ஆகப்போகிறது அப்போது திடீரெண அந்த பெண்ணின் அப்பா பெரியவர்

“என் பொண்ணு... பாரதியை கானும்... வேல் ஐயா...”

என்று கத்திக்கொண்டு ஓடி வருகிறார். அதை பார்த்த வேல் ஓரமாக அழைத்துச் சென்று விசாரிக்கிறார். அப்போது ஒருவர் “யாரு பாரதிதானே மண்டவத்துக்கு வெளியே அழுதுக்கிட்டே போனாள் நான் பார்த்தேன்”

என்றதும் பழனி அதிர்ச்சியாகிறான் மனதுக்குள்ளயே வருண் தான்  பாரதியை ஏதோ செய்திட்டானோ இல்ல கூட்டிட்டு போய்ட்டானோ, என்று மனதுக்குள்ளேயே பேசிக்கொண்டு வேளியே வருகிறான்.

அப்போது பாத்ரூம்க்கு வெளியே வருண் சுவரில் கைவைத்து சாய்ந்தப்படியே நிற்க்கிறான், அதை பார்த்த பழனி கோபமாக

“டேய் நீ எத்தனை தடவ சொன்னாலும் திருந்த மாட்டியாடா  உங்க அப்பா உன் குடும்பம், எல்லா எந்த நிலையில ‘வந்தவாசி’-லிருந்து சென்னைக்கு வந்திங்கனு மறந்திட்டியா”

“இல்லடா நா... ஒன்னும் பண்ணல அந்த பொண்ணுதா...”

“டேய் உங்க அப்பா எத்தனை தடவை என்கிட்ட வந்து கவலைப்பட்டு பேசிருக்காரு தெரியுமா”

“டேய் பழனி நான் சொல்றத கொஞ்சம்...”

“உங்க அப்பா எவ்வளவு கவலையாக நான் 4500 ரூபாய் தான் சம்பலம் வாங்குறேன், இந்த சம்பளம் வீடு வாடைகைக்கும், வருணை படிக்கவைக்கறதுக்கும், வீட்டுசெலவுக்கும் தான் சரியா இருக்கு நான் எப்படி என் மூனு பெண்களுக்கும் கல்யாணம் பண்ண போறேனோ ஒன்னும் புரியல, என்க்கு ஒரே நம்பிக்கை வருண் தான்னு எத்தனை தடவை என்கிட்ட சொல்லிருக்காருனு தெரியுமா...”

என்றதும் வருண் முகம் சோகத்தில் மாறி, தலை குனிந்தப்படியே நிற்க்கிறான், பழனி மீண்டும்

“டேய் உங்க அக்க கல்யாணம் எப்படி நின்னுச்சி நீங்க எப்படி, எந்த நிலையில சென்னைக்கு வந்திங்க...”

என்றதும் வருண் யோசித்தபடி அவன் கண்கள் கலங்கி கண்களிருந்து கண்ணீர் வடிகிறது, அப்போது ‘பாரதியின்’ அப்பா அந்த பெரியவர் அழுதுக்கொண்டே வேகமாக ஆவேசமாக இவர்களை நோக்கி வேகமாக வருகிறார்.

தொடரும்...






2 comments:

  1. இன்னும் கொஞ்சம் வேகப்படுத்தினா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் கமல்..கதைக்கு தேவையில்லாத விசயங்களை நறுக்குனு நாலு வார்த்தையில விவரிச்சிட்டு போனீங்கன்னா நல்லா இருக்கும்.. இது சீரியலுக்கு எழுதற ஸ்கிரிப்ட் மாதிரி இருக்குங்க.. இப்படி சொல்றனேன்னு கஸ்டமா இருந்தா சாரிங்க..

    ReplyDelete
  2. அடுத்த பாகத்துலதான் ட்விஸ்ட்டா... ஓகே ஓகே... எழுதுங்க கமல் காத்திருக்கிறேன். நண்பர் ரமேஷ் கூறிய விஷயங்களை பின்பற்றினால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.

    -
    DREAMER

    ReplyDelete