Sunday, November 28, 2010

அண்ணாநகர் ஆர்ச் வரை - பாகம் -2 (பாரிமுனை ஓவியம்)

   


                       பாரிமுனை ஓவியம்

                                    பாகம் - 2

அதிகாலை சூரியன் மெல்ல எழுகிறது, ஒரு இருண்ட அறையில் பாலா தூங்கிக்கொண்டிருக்கிறான். அறைக்கு வெளியே சாமி பாட்டும் கற்பூரம் காட்டி மணி அடிக்கும் சத்தமும் கேட்கிறது. பாலா போர்வையை நன்றாக இழுத்துப்போத்திக்கொண்டு  தூங்குகிறான். அப்போது திடீரென “இறகைப் போலே அலைகிறேனே உந்தன் பேச்சை கேட்கையிலே...” என்ற பாட்டுடன் பாலா ஃபோனுக்கு கால் வருகிறது, பாலா அந்த பாட்டின் சத்தத்தை கேட்டு நெளிந்தப்படி மெதுவாக எழுந்து பார்க்கிறான், போனில் my wife என்ற பெயரைப் பார்த்தவுடன் ஃபோனை ஆன் செய்து

“சொல்லுடி...செல்லம்” என்றதும் போனில்

“ÀôÒ ¨¿ðÎõ §À¡ý ¦ºöÂÄ þýÉ¢ìÌ ºñ§¼, ¸¡¨Ä¢§Ä ஃ§À¡ன் ¦ºöÅ, இரண்டு பேரும் ±í¨¸Â¡ÅÐ §À¡Ä¡É¡...” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே பாலா

“ஏய் செல்லம் நான் சொல்றத கொஞ்சம் கேளுடி நேற்று பஸ்ல வரும்போது ஒரு பெரியவர்கிட்ட பேசிக்கிட்டு வந்தேன். அப்பகூட நீ போன் செய்த உன் கூட பேசிக்கிட்டுயிருந்தேன்,” என்று சொல்லிக்கொண்டிருக்க ஃபோனில் அவள்

“அதுக்கு என்ன மறந்திட்டியா”

“ஏய் அது இல்லடி செல்லம்... அவர் இதுவரையும் யாரிடமும் சொல்லாத அவர் காதல் கதையையும் இன்னும் பல சுவாரசியமான தகவல்களையும் சொன்னார். அதுமட்டும் இல்லாம தன் காதல் ஞாப¸¡ர்த்தமா பல வருடங்களாக பாதுகாத்து வைத்திருந்த தஞ்சை பெரியகோயில் போட்ட 1000ரூபாய் நோட்டை  என்னிடம் காட்டினார். ஆனா அவர் போனதுக்கு அப்புறம் பார்த்தா அந்த 1000ரூபாய் நோட்டு என்கிட்ட இருக்கு!. அப்பறமா இறங்கி ரொம்பநேரமா அவரை தேடி, வீட்டுக்கு வந்தேன் அதனாலதான் உனக்கு ஃபோன் பண்ணமுடியல”

“சரி இப்போ அந்த 1000ரூபா நோட்ட என்ன பண்ணபோற...”

“இந்த நோட்டுல இரண்டு பக்கமும் இரண்டு அட்ரஸ் இருக்கு” என்றதும் ஃபோனில் அந்தப் பெண்

“அப்போ இந்த அட்ரஸ்ஸ கண்டுபிடிச்சி கொண்டுபோ கொடுக்கப் போறியா...!”

“ஆமா... இந்த காதல் சின்னத்தைச் சேர்த்து வச்சா நம்ப காதலை யாராவது ஒருத்தவங்களாவது பேசுவாங்கள்ள, செல்லம் நம்ப ஈவ்னிங் மீட்பண்ணலாம்...” என்று பேசிக்கொண்டிருக்கும் போது அறைக்கு வெளியிலிருந்து பாலா அம்மா

“டேய் பாலா எவ்வளவு நேரம்டா தூங்குவ எழுந்திருடா...” என்று கூப்பிடும் குரலை கேட்டதும்

“இதோ வரம்மா...” என்று சொல்லிவிட்டு ஃபோனில் “செல்லம் நான் அப்பறம் பேசுறேன்” என்றுச் சொல்லி ஃபோனை வைத்துவிட்டு, அறையை விட்டு வெளியே வருகிறான். அவன் அம்மா

“யாரு மகாவா... காலையிலேயே ஆரம்பிச்சிட்டியா...”

“இல்லம்மா சும்மா பேசிக்கிட்டு இருந்தோம்”

“சரி விடு, ரொம்ப வலியாத...” என்றதும் பாலா சிறிது நேரம் சென்று

“அம்மா கொஞ்சம் வெளியில போய்ட்டு வரம்மா”

“சரி போய்ட்டு வா மதியம் சாப்பாட்டுக்கு வந்திடுவில”

“வந்துடுவம்மா”

என்றுச் சொல்லி வேகமாக கிளம்புகிறான். ரெடியாகிவிட்டு, பர்ஸ்சில் இருக்கும் அந்த 1000ரூபாய் நோட்டை எடுத்து திருப்பிப் பார்க்கிறான், இருபுறத்திலும் முகவரி இருக்கிறது, ஒரு பக்கத்தில் மண்ணடி, பவலகாரத்தெரு பாரிமுனை, என்றும் மறு பக்கத்தில் தஞ்சை முகவரியும் இருக்கிறது, பாலா அதை பார்த்துவிட்டு மனதுக்குள்ளேயே

“தஞ்சைக்கு இப்ப போகமுடியாது. பீச் ஸ்டேசன் போய் கண்டுபிடிச்சி கொடுத்திட வேண்டியது தான்”

என்றுச் சொல்லியபடியே அம்மாவைக் கூப்பிட்டு “அம்மா போயிட்டு வரம்மா...” என்கிறான், அம்மாவும் “சரி போயிட்டு சீக்கரம் வா...” என்றகிறாள் இவனும் சரிம்மா.. என்று சொல்லிச் செல்கிறான் மக்கள் கூட்டம் அதிமாக இருக்கும் ரெங்கநாதன் தெருவின் வழியாக நடந்துக் கொண்டு அந்த நெருக்கடியை கடந்து மாம்பலம் ரெயில்வே ஸ்டேஷனுக்கு சென்று பீச் ஸ்டேஷனுக்கு டிக்கெட் எடுத்துக் கொள்கிறான்,
பிறகு ரெயிலில் செல்வதற்கு காத்திருக்கும் போது ஒருவர் முகத்தில் அதிகமான தாடியுடனும் மிகவும் ஏழ்மையான நிலையிலும் வந்து பாலாவிடம்

“தம்பி வணக்கம் நான் பாரிமுனைக்கு போகனும் காசு இல்ல கொஞ்சம் டிக்கெட் எடுக்க காசு தறிங்களா..”

என்றதும் பாலா அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு மனதுக்குள் “இவரிடம் காசு கொடுத்தா காசை வைத்துக்கொண்டு வேறு யாரிடமாவது காசு வாங்க ஆரம்பித்து, பிறகு பணம் சம்பாதிக்க தொடங்கிருவாரு” என்று யோசித்து அவனிடம் இருக்கும் டிக்கெட்டை அவரிடம் கொடுத்துவிட்டு இவன் மீண்டும் சென்று டிக்கெட் எடுத்து வந்து பார்க்கிறான், அவரைக் கானவில்லை மனதுக்குள்ளேயே

“சரி அவர் வேலை முடிந்தது போய்ட்டாரு”

என்றுச் சொல்லிக் கொண்டே ரெயிலில் ஏறிச் செல்கிறான், ரயில் ‘பூங்கா’ ஸ்டேஷனை கடந்து செல்கிறது அப்போது பாலாவிடமிருந்து காசு கேட்டு, டிக்கெட் வாங்கியவர் திடீரென வந்து நிற்கிறார். பாலாவைப் பார்த்து

“தம்பி எங்கபோறிங்க...” என்றதும் பாலா

“பீச் ஸ்டேஷன் போறங்க...’ என்கிறான் அவர் உடனே ‘பாரிமுனைக்கா... சரி வாங்க நானும் அங்கதானே போறேன்’ என்கிறார். உடனே பாலா அவர் சொன்ன பாரிமுனை வார்த்தையை வைத்துக் கொண்டு அவரிடம்

“ஏங்க... பாரிமுனையில பவலகாரதெரு எங்க இருக்குங்க” என்று கேட்டு விட அவர் முகம் சிறிது நேரம் கோபமாக பாலாவையே பார்த்துக்கொண்டிருக்க... பாலா பயந்த நிலையில் நிற்கிறான். அவர் சிறிது நேரத்தில் சிரித்துக்கொண்டே

“நம்ப பவலகாரதெருக்கா... வா நான் கூட்டிட்டு போறேன்.” என்கிறார்.

பாரிமுனை சென்று இறங்கியவுடன் ஒரு முறை அந்த 1000 நோட்டில் உள்ள முகவரியை பார்த்தப்படி, அப்படியே பாரிமுனையை ஒரு பெரிய பார்வையிடுகிறான். பார்வையிட்டப்படியே நிற்கிறான். அவர் அவன் பின்னே வந்து

“தம்பி என்ன அப்படியே பார்த்து நின்றுகொண்டு இருந்தா... வாங்க போகலாம்” என்று சொல்லி அவர் முன்னாடி நடந்து செல்ல பாலா அவரைப் பின் தொடர்ந்து செல்கிறான். சிறிது தூரம் அவரை பின்தொடர்ந்து சென்றுகொண்டு இருக்கிறான். அவர் திடீரென மக்கள் கூட்டத்தில் சென்று மறைந்து விடுகிறார். பாலா அவர் எங்கே போனார் என்று தேடிக்கொண்டே, அப்படியே அந்த தெருவைப் பார்க்கிறான், தள்ளுவண்டி, ரிக் ஷா, பெரிய மூட்டைகளை சுமந்துக்கொண்டும், சைக்கிள், பைக், கார், இவற்றுடன் மக்கள் கூட்டம் என வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் அந்த தெருவைப் பார்த்தபடி அப்படியே கடைகளின் போர்டை பார்க்கிறான். அதில் மண்ணடி என்று இருப்பதைப் பார்த்து வியந்துபோகிறான்.

அப்படியே வேகமாக நடந்து கொண்டு பவலகாரதெருவை விசாரித்துக்கொண்டு சென்றுகொண்டு இருக்கிறான், அப்போது ஒருவர் வீதியில் நடந்து வந்துகொண்டு இருக்கும் போது திடீரென நின்று கால் மிதியை கழட்டிவிட்டு மேலே பார்த்து கைநீட்டி வணங்குகிறான். பாலா என்ன என்று பார்க்கிறான். அது ‘காளிகாம்பாள்’ கோயிலின் கோபுரம் இவனும் வனங்கிக்கொண்டு மீண்டும் நடந்தபடி ஒரு தள்ளு வண்டிகாரரிடம்
“அண்ணா இந்த பவலகாரதெரு எங்கணா இருக்கு” என்றதும் அவர் சிறிது நேரம் யோசித்து

“நம்ப கோரல்மர்ச்சன் ஸ்ட்ரீட்டா... இதோ அந்த தெரு தான்”

என்று அந்த தெருவைக் காட்டிவிடுகிறார். அவன் அந்த தெருவைப் பார்த்தபடி நடக்க ஆரம்பிக்கிறான், அந்தத் தெருவில் இருக்கும் கிருஷ்ணகோயிலை கடந்து நடந்துகொண்டிருக்கிறான். அப்போது தெரு ஓரத்தில் ஒரு சிறிய வேப்ப மரம் ஒன்று இருக்கிறது, அதில்  வரையப்பட்ட ஓவியம் ஒன்று மாட்டிருக்கிறது, அதைப் பார்த்தபடியே பாலா அருகில் செல்கிறான். அதில் தஞ்சைபெரியகோயில் வரையப்பட்ட ஓவியம் இருக்கிறது. அதற்கு கீழ் 1010 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று எழுதியிருக்கிறது, அதை உற்று கவனிக்கிறான் அதில் உள்ள எழுத்தும் 1000 ரூபாய் நோட்டில் உள்ள முகவரி எழுத்தும் ஒன்றாக இருப்பதை உணர்கிறான். அந்த ஓவியத்தை நன்றாக பார்த்துக்கொண்டு இருக்கிறான்.  அதில் ஒரு ஓரத்தில் தஞ்சைகோயில் உருவம் போட்ட தங்கக்காசு பாதி வெட்டிய நிலையில் வரையப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்ததும் இவனுக்கு ஒன்று ஞாபகம் வருகிறது.

அவன் அம்மா, பாலாவின் அப்பா ஞாபகமா ரொம்ப வருடமாக வைத்திருக்கும் பாதியாக வெட்டப்பட்ட தங்ககாசு, அதில் இருக்கும் வருடமும் இந்த ஓவியத்தில் இருக்கும் பாதி தங்க காசின் வருடமும் பொருந்துகிறது, அதைப் பார்த்தவுடன் அதிர்ச்சியாகவும் ஒன்னும் புரியாமலும் திகைத்து நிற்க்கிறான். அப்போது அவன் ஃபோனுக்கு my wife என்ற பெயருடன் ‘மகா’விடமிருந்து கால் வருகிறது

“ஹலோ செல்லம் சொல்லு...”

“பப்பு எங்க இருக்க, அப்பாவும் அம்மாவும் மகாபலிபுரம் போயிருக்காங்க. நீ வந்தினா சீக்கரம் பார்க்கலாம்”

“மகா சீக்கரம் வறேன், இங்க எனக்கு ஒன்னும் புரியல”

“என்ன பப்பு சொல்ற... என்ன ஆச்சு...!”

“ஒன்னும் இல்ல இங்க உள்ள ஒரு ஓவியத்துல எங்க அம்மா பாதி தங்க காசு வைச்சிருக்காங்கனு சொன்னன்ல... அதோட இன்னோரு பாதி இங்கு வரையப்பட்டிருக்கு” என்றதும் மகா ஆச்சிரியமாக...!

“என்ன... உண்மையாவா”

“ஆமா செல்லம் அதத்தான் பாத்துகிட்டு இருக்கேன்”

“பப்பு நானும் அங்கு வரவா”

என்று பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு குடிகாரன் அவனையே நின்று உற்று பார்த்துக்கொண்டிருக்கிறான் திடீரென்று

“டேய் என்னடா நானும் பார்க்கிறேன் ரொம்ப நேரமா இந்த வேப்ப மரத்த பாத்தே பேசிகிட்டு இருக்க” என்றதும் பாலா ஃபோனில்

“செல்லம் நான் அப்பறம் பேசுறேன்” என்று போனை வைத்து விட்டு

“என்னங்க சும்மாதாங்க” என்றதும் குடிகாரன் நக்கலாக

“என்ன நொன்னாங்க... எதுக்கு இங்க நிக்கிற”

“இல்ல நான் ஒரு பெரியவர்... தாடியெல்லாம் வைச்சிகிட்டு... கையில ஒரு துணிப்பையோட இருப்பாரே...” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது அந்த குடிகாரன்

யாரு ராசாங்கமா... “எலவு வீட்டுக்கு வந்துட்டு இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க” என்றதும் பாலா அதிர்ச்சியாக

“என்ன சொல்றிங்க”

“அதோ பாரு மோளம் அடிக்கிற சத்தம் கேட்கல” என்றதும் பாலா தூரத்தில் மக்கள் கூட்டமாக இருப்பதையும் மோளம் சத்தத்தையும் கேட்டு அதிர்ச்சியோடு வேகமாக ஓடுகிறான், பாலா ஓடும் வேகத்தில் அந்த குடிகாரன் கீழே விழுகிறான். பாலா மின்னல் வேகத்தில் ஓடுகிறான், ஓடிச்சென்று மூச்சுவாங்கியபடி நிற்கிறான். ஒரு வீட்டின் முன் பெண்களும் ஆண்களும் நிறையபேர் நிற்கின்றனர். பெண்கள் நிறையபேர் வட்டமாக ஒருவரையொருவர் பிடித்தபடி அழுதுகொண்டிருக்கிறார்கள், ஒரு பக்கத்தில் சாவுக்கான இசையுடன் விசில் அடித்துக்கொண்டு நடனம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள், பாலா அனைத்தையும் பார்த்துக் கொண்டு மனதுக்குள்ளேயே...

“இறந்திருப்பது இந்த 1000ரூபாய் நோட்டு காதல் சின்னத்துக்குரியவராக இருக்கக்கூடாது” என்று சொல்லிக் கொண்டே அருகில் செல்கிறான். பெண்கள் அவனைப் பார்க்கவிடாமல் நிறையபேர் மறைத்துக்கொண்டு இருக்கிறார்கள். பாலா அதையும் தாண்டி பார்த்துவிட்டு

“அப்பாடி...” என்று பெருமூச்சு விட்டு முகத்தை மூடியபடி நிற்கிறான். சிறிது நேரம் சென்று அருகில் இருக்கும் கட்டையில் அமர்ந்திருக்கிறான், அப்போது அவன் ஃபோனுக்கு sms வரும் சத்தம் கேட்க, ஃபோனை எடுத்துப் பார்க்கிறான். my wife என்ற பெயருடன் sms வந்திருக்க அதை படித்துவிட்டு, கொஞ்சமாக அந்த அதிர்ச்சிலிருந்து விடுபடுகிறான். அப்போது ஒருவர் பின்புறமாக வந்து

“தம்பி...” என்று கூப்பிட பாலா ஃபோனைப் பார்த்தபடியே திரும்புகிறான்.


தொடரும்...
Monday, October 25, 2010

அண்ணாநகர் ஆர்ச் வரை... தொடர்கதை பாகம் 1

                                                     அண்ணாநகர்  ஆர்ச் வரை...

                          பாகம் 01

வில்லிவாக்கம் பேருந்து நிலையம், ஒருவன் கையில் கட்டியிருக்கும் வாட்சியில் நேரத்தை அடிக்கடி பார்த்தபடி நிற்கிறான், தோளில் ஒரு பேக்கை மாட்டிக்கொண்டு,  கையால் தலையைச் சொரிந்தபடி நிற்கிறான், அவன் அருகில் பேருந்து நிலையத்தில் நிறைய பேர் பேருந்துக்காக காத்திருக்கிறார்கள். அப்போது பக்கத்தில் இருக்கும் ஒருவரிடம்

“அண்ணா தியாகராயநகர் போகும் பஸ் 47 எப்பணா வரும்”

“எது திநகர் பஸ்சா அதுக்குதான் நானும் ஒன்னவர்ரா குந்திருக்கேன்”

என்றதும் அவன் வீட்டுக்கு போகும் கவலையில் தலையை சொரிந்தப்படி அங்கேஇங்கே நடக்கிறான், பிறகு யோசித்து பாக்கெட்டில் இருக்கும் போனை எடுத்துப் my amma என்று சேவாகியிருக்கும் நம்பருக்கு கால் செய்கிறான். போனில் எடுத்தவுடன் அந்தப்பக்கத்திருந்து

“டேய் பாலா எங்கயிருக்க வீட்டுக்கு எப்ப  வருவ”

“இல்லம்மா பஸ்க்காகத் தான் காத்திருக்கேன் வந்தவுடனே வந்திரம்மா”

“சரிடா சீக்கரம் வா சப்பாத்தி போட்டு வைக்கிறேன்”

“சரிம்மா பஸ் வருது நேர்ல வந்து பேசுறேன்”

என்று சொல்லி போனை கட்பண்ணிவிட்டு வரும் பேருந்தை பார்க்கிறான் அது 47 தான். உடனே பேருந்தை நோக்கி ஓடுகிறான். அனைவரும ஓடிச் சென்று பேருந்தில் ஏறுகிறார்கள். பாலா ஒரு இருக்கையை பிடித்து அமர்கிறான், அவன் அமர்ந்த இருக்கை பேருந்தின் பின் சக்கரத்துக்கு நேராக மேலே உள்ள இருக்கை அதனால் பாலா சரியாக அமரமுடியவில்லை அவன் கால் முட்டி எதிரே உள்ள இருக்கையில் இடிக்கிறது, சிறிது நேரம் கழித்து பார்க்கிறான் அவன் அமர்ந்திருக்கும் இருக்கையை தவிற மற்ற இருக்கையில் அனைவரும் அமர்ந்திருக்கிறார்கள் அவன் பக்கத்து இருக்கை மட்டும் காலியாக இருக்கிறது.

பேருந்து புறப்படும் நேரத்தில் ஒரு பெரியவர் கஷ்ட்டப்பட்டு பேருந்தில் ஏறி வந்து பாலா பக்கத்தில் அமர்ந்துக்கொண்டே

“இம்புட்டு நேரம் காத்திருந்து இந்த சொகுசுபேருந்து தான் வந்திச்சி அதான் இது புறப்படும் நேரம் வரைக்கும் ஏறாம இருந்து வேற பஸ் வந்தா ஏறுலாம்னு பாத்தேன் அதுக்குள்ள இத எடுத்திட்டாங்க அதான் தம்பி வந்து ஏறிட்டேன்.”

என்றுச் சொல்லிக்கொண்டே அமர்ந்து பாலா முகத்தை பார்க்கிறார், பாலா அவரை பார்த்து மௌனமாக தலையை ஆட்டிக்கொள்கிறான், பிறகு சிறிது நேரம் அந்த பெரியவர் அவர் பாக்கெட்டில் இருக்கும் காசுகளை தேடி எடுத்துக் கொண்டு எண்ணியபடி

“தம்பி சொகுசு பஸ்சுல டிக்கேட் 7ரூபாவா, 10ரூபாவா தம்பி அண்ணாநகர் ஆர்ச் வரைக்கும் போகனும்”

“எவ்வளவுனு தெரியலங்க”

“இல்ல தம்பி என்கூட சின்னவயசுல தஞ்சாவூருல போஸ்ட்மேனாக வேலை பார்த்த நண்பன் ஒருவன், ரொம்ப முடியாம சாகுற நிலையில இருக்குறதா சேதி வந்திச்சி அதனால வற வேகத்துல பணம் எடுத்திட்டு வறல”

“பணத்த விடுங்க பாத்துக்கலாம் நீங்க தஞ்சாவூர்ல போஸ்ட்மேனா வேலை பாத்திங்களா எப்போ...எங்க...!? நானும் தஞ்சாவூர்தான்”

என்று ஆச்சிரியமாக கேட்டுக்கொண்டிருக்க பேருந்து, பேருந்துநிலையத்தை விட்டு வெளியே செல்கிறது.

“ அதுவா தம்பி 1958-ல் முதன் முதல வந்தேன், அதை என்னால இன்னைக்கும் மறக்க முடியல, நான் போன அன்று எல்லா இடத்திலும் ‘நெல்’ அறுவடை காலம், அதனால ஆங்காங்கே யானை கட்டி நெல்லை அடித்துக்கொண்டிருந்தார்கள் அதை பார்ப்பதறக்கு யானையுடன் அந்த ஊர் மக்களே என்னை வரவேற்பது போல் இருந்தது”

என்றுச் சொல்லிக்கொண்டு இருக்கும் போது கன்டக்டர் வந்து “டிக்கெட்... “எங்கபோறிங்க என்றார்,” உடனே பாலா டிக்கெட் வாங்கிக்கொள்கிறான்.

“தம்பி எவ்வளவு டிக்கெட் 10ரூபாங்க” என்றதும் “ அப்பாடி...” என்று பெருமூச்சு விட்டபடி

“தம்பி அப்போ நான் தஞ்சையிலிருந்து எக்மோர் வர்றதுக்கு ஆறணாதான் தம்பி”

என்றதும் பாலா தெரியாததை தெரிந்துக் கொண்டோம் என்ற கோணத்தில் தலையை அசைத்தப்படி “அப்படியா...” என்றான், அந்த பெரியவர் கையில் இருக்கும் சில்லரை காசுகளை பாலாவிடம்

“தம்பி இந்தாப்பா இந்த காசை வைச்சிக்கப்பா”

என்றதும் பாலா “வேனாங்க... என்றுச் சொல்லிக்கொண்டே பேக்கை திறந்து ‘கூல்டிரிங்ஸ்’சை எடுத்து திறந்து குடிக்கிறான், அதை பார்த்த பெரியவர் தம்பி இத குடிக்காத, என்க்கு இன்னும் மறக்கமுடியாத ஒரு விசியம், தஞ்சாவூருக்கு போனதுக்கு மூன்று நாளுக்கு அப்பறம் சும்மா நடந்து சுத்திப்பாத்துக்கிட்டு இருந்தேன்,


எங்கு பார்த்தாலும் விவசாய வேலைகள் சிலர் விதைகளை பாதுகாத்து வைக்கும் வேலையை செய்துக்கொண்டிருந்தார்கள். சிலர் வைக்கோல் போர் போட்டுக்கொண்டிருந்தார்கள், பெண்கள் வரிசையாக நின்று கொண்டு உரலில் ‘நெல்’ குத்திக்கொண்டும், சில பெண்கள் முறத்தில் அரிசி தனியாகவும், தவுடு தனியாகவும் புடைத்துக்கொண்டிருந்தார்கள், ஒருவர் ஒரு சிறுய குடிசையில் மண்பாணை செய்துக்கொண்டிருந்தார். அதை பார்த்தபடியே வீதியின் நடுவில் ஒரு பெரிய வேப்பை மரம் அதன் அடியில் அமர்வதற்கென கட்டைகள். அதில் அமர்ந்து வேப்பமரத்துக் காற்றை சுவாசிச்சேன் பாருங்க.... அந்த சுவாச காற்றை சுவாசிக்க என் சுவாச குழாய் இன்னும் ஏங்கிக் கொண்டிருக்கு தம்பி அப்ப ஒரு அம்மா வந்து

“தம்பி வணக்கம் நீங்க தான் புதுசா வந்திருக்குற தபால்காரரா”

“ஆமாங்க அம்மா நான் தான் இனி தபால் நிலையத்துல இருப்பேன்”

“அப்படிங்களா தப்பி இருங்க வந்திடுறனு”

சொல்லிச் சென்று ஒரு மண் கலயத்துல மோர் எடுத்து வந்து கொடுத்தாங்க நானும் குடிச்சேன் ஆனா அந்த மோரோட ‘ருசி’ என் நாக்குல இன்னும் ஒட்டிருக்கு தம்பி”

என்று பேசிக்கொண்டிருக்கும் போது பாலாவுக்கு போன் வருகிறது, பாலா போனை எடுத்து காதில் வைத்தப்படி ஜன்னல் பக்கம் முகத்தை திரும்பிக்கொண்டு

“ஹலோ... வீட்டுக்கு போயிட்டியா...” என்றதும் போனிலிருந்து ஒரு பெண் குரல்

“ பப்பு நான் வீட்டில்தான் இருக்கேன் நீ வீட்டுக்கு போய்ட்டியா”

“இல்ல செல்லம் இப்ப பஸ்ல வீட்டுக்கு போய்கிட்டுயிருக்கேன்”

“பப்பு இனனிக்கு அப்பாகிட்ட நம்ம காதல சொல்லப் போறேன்”

“ஏய் லூஸ்சு இப்பவேவா சொல்லப் போற. அப்பறம் பாத்துக்கலாம்” என்றதும் அவள்

“பப்பு அப்பா வராங்க அப்பறம் போன் பண்றேன். ‘ஐ லவ் யு’ ” என்றுச் சொல்ல பாலாவும் மெதுவாக

“ ஐ லவ் யு” என்றுச் சொல்லி போனை வைத்து விடுகிறான்.

பக்கத்தில் அந்த பெரியவர் கண்கள் கலங்கியபடி அமர்ந்திருக்கிறார் அதை பார்த்த பாலா

“ஐயா என்னாச்சி எதுக்கு கண் கலங்குறிங்க”

“ஒன்னும் இல்ல தம்பி சும்மா”

என்றதும் பாலா சிறிது நேரம் யோசித்து திடீர்ரெண “ஐயா நீங்க லவ் பண்ணிங்களா” என்று கேட்டுவிடுகிறான் அவர் உடனே கண்களில் வரும் கண்ணீரை துடைத்துக்கொண்டு

“லவ் பண்ணாம யார் தம்பி இருக்கா...” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே பாலா ஆர்வமாக

“அப்போ லவ் பண்ணிங்க...! பொண்ணு தஞ்சாவூர் தானே சொல்லுங்க” என்றான் அவர் சிறிது யோசித்து

“ஆமா தம்பி”  என்று கண்கள் கலங்கிப்படி மெல்லியதாய் சிரித்தார். உடனே பாலா மீண்டும் ஆர்வமாக

“ஐயா எங்க பாத்திங்க, எப்படி பார்த்திங்க சொல்லுங்க” என்றான் அவர்
 மௌனச்சிரிப்பு சிரித்தபடியே

“ஒரு நாள் தபால் நிலையத்துல வேகமா ஜன்னல் ஓரமாக அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போ திடீர்ரென காற்று வேகமாக விசியது ஜன்னல் அருகே ஒரு அழகு தேவதை நூல் புடவை அணிந்து சிரித்தபடியே வந்துநின்றாள், நான் காற்றில் உறைந்துபோனேன், பிறகு அவள் வேகமாக பேசிய போது தான் என்னை நான் உணர்ந்தேன் அவள் முதலில் என்னிடம் கேட்டது...”

“ஐயா எனக்கு ஒரு உதவி செய்விங்களா” என்று கேட்டாள் சரித்த முகத்துடன் நான் என்னை அறியாமல்

“சொல்லுங்க...” என்றேன் அவள் தயங்கியப்படி

“ஐயா நம்ப தஞ்சாவூர் கோயில் போட்ட 1000ரூபாய் நோட்டு இருக்கா... “நான் பார்க்கனும் ரொம்பநாள் ஆசையிங்க” என்றாள் நான் உடனே

“ஒ... இருக்கே” என்றேன் அவள் உடனே ஆர்வமாக

“எங்க..., எங்க... காட்டுங்க” என்றால் நான் உடனே

“வரும், நான் அப்பறமா காட்டுறேன்னு சொன்னேன்” என்றவுடன் பாலா

“அப்போ! 1000ரூபா நோட்ட காட்னிங்களா, அவங்ககிட்ட பேசினிங்களா” என்றான் ஆர்வத்துடன்,

“இம்... காட்டினேன் மூன்று மாதத்துக்கு அப்பறம்”

என்றுச் சொல்லிக் கொண்டிருக்க ரோட்டில் பேருந்து சென்றுக்கொண்டிருக்க ஜன்னல் வழியாக இருபுறமும் பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்தார். அப்போது பேருந்தில் ஒருவர் ஆடையில் அமெரிக்கா என்று பதித்திருந்தது, அதை பார்த்து அமைதியாக இருந்தார் பேருந்து அண்ணா ரவுண்டானத்தை நோக்கி நெருங்கியது அவர் திடீர்ரென

“தம்பி உணக்கு ஒன்னு தெரியுமா அப்போ... வேளிநாட்டிலிருந்து நிறையா பேர் இங்க தான் வந்து வெளிநாட்டு பொருள் விற்பனை கண்காட்சி போட்டிருந்தாங்க அதை பாக்க நான், என் நண்பர்கள் அனைவரும் ஆற்றில் வந்து குளிச்சிட்டு வந்து பார்ப்போம்”

“அப்படியா...!” என்று ஆச்சிரியமாக கேட்டு அண்ணாநகரை ஜன்னல் வழியாக தலை நிமிற்ந்து பார்த்துக்கொண்டான், பாலா மீண்டும்

“ஐயா 1000ரூபாய் நோட்ட காட்டிட்டிங்க அப்பறம் என்னாச்சி”

“என்ன தம்பி இவ்வளவு ஆர்வமா இருக்க,” என்றதும் அவன் “சொல்லுங்க...” என்றான்

“அவளிடம் என் காதலை சொன்னேன் அதற்கு அவள் என்ன சொன்னால் தெரியுமா”

“உங்களோடு சேர்ந்து 100 வருடத்துக்கு மேல் வாழனும்” என்றாள் திகைத்துப்போனேன் என்றார் பெரியவர். உடனே பாலா

“ஐயா இப்போ அவங்களோட சேர்ந்து தானே வாழ்ந்துகொண்டிருக்கிங்க” என்றதும்  பேருந்து சென்றுக்கொண்டிருக்க அவர் ஜன்னல் காற்றில் பார்த்தப்படியே  

“ அதல்லாம் விடுங்க தம்பி எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை இருந்துச்சு
தஞ்சை பெரியகோயில் 1000 ஆண்டு நிறைவு விழாக்கு போகனும்னு இருந்தேன் ஆனா அதும் நடக்காம போச்சு. இப்போ கடைசி ஆசை இந்த 1000 ஆண்டு முடியறத்துக்குள்ள தஞ்சை பெரியகோயிலுக்கு போயிடனும்...” என்று பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென “தம்பி அண்ணாநகர் ஆர்ச் வந்திருச்சி”

என்றதும் பாலா அவசரமாக “ஐயா எனக்கு ஒரு உதவி அந்த 1000ரூபா நோட்ட காட்டுங்க என்கிறான் அவரும் காட்டுகிறார்.

“இந்தாங்க தம்பி”

 என்று காட்டி, தம்பி நம்ப இளமைக் காலத்தை நினைச்சி பாக்குறப்ப இனிமையா இருக்கனும் அதவிட்டுட்டு அழுகக்கூடாது “பாத்துங்க தம்பி காதலிக்கிறிங்க...”

என்று பேசிக்கொண்டிருக்க பேருந்து நிற்கிறது அந்த பெரியவர் பேருந்தை விட்டு இறங்கிக்கொண்டே “தம்பி போய்ட்டு வரம்ப்பா” என்கிறார் பாலா “சரிங்க” என்கிறான் சிறிது நேரம் யோசித்து

“இச்ச... அவர் பெயரைக் கூட கேட்களியே”  என்று வேகமாக ஐயா உங்க பெயர் என்ன என்கிறான் பேருந்து சென்றுவிடுகிறது. பாலா ஜன்னல் வழியாக அவரை திரும்பி பார்க்கிறான். அவர் ரோட்டை கடந்து செல்கிறார். பாலா மீண்டும் கவலையாக முகத்தை திருப்பிக் கொள்கிறான், கையில் பார்த்தால் அந்த 1000ரூபாய் நோட்டு இருக்கிறது. உடனே அதிர்ச்சியாக பஸ் நிறுத்துங்க...! என்று கத்தியப்படி இறங்க படிக்கு ஓடுகிறான். பேருந்து தியாகராய நகரை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது, PVR cinemas நன்றாக தெரிய பேருந்து வளைந்து சென்று இருளில் மறைகிறது.


தொடரும்...


Thursday, October 21, 2010

இருதிருமணம் பாகம் 5


                     பாகம் 5

பாரதியின் அப்பா அழுதுக்கொண்டே இவர்களை நோக்கி வருவதை பார்த்து பயந்து நிற்க்கிறான் பழனி, அவர் வாய்க்குள்ளேயே புலம்பியபடி

“பயபுல்ல சொல்லாமலே வீட்டுக்கு ஓடிட்டா கொஞ்ச நேரத்துல என்ன கதிகலங்கவச்சிட்டா”

என்று புலம்பிபடிச் செல்ல, பழனி ‘அப்பாடி...’ என்று பெருமூச்சி விட வருண் கண்கள் மூடியப்படி அவன் அக்க கல்யாணம், வாழை மரம் கட்டிக் கொண்டிருப்பது, தோரணம் என தடபுடலாக நடந்தது அவன் கண்ணுக்குள் வருகிறது. பழனி வருணின் தோளில் கைவைக்து

“டேய் அந்த பொண்ண என்னடா பண்ண... சொல்டா” என்று கைகளால் தோளை பிடித்து ஆட்டுகிறான், வருண் கோபமாக

“டேய் நான் ஒன்னும் அவள பண்ணல அவதான் என்கிட்ட வந்து நான் உங்கள காதலிக்கிறேனு சொன்னா”

“அதுக்கு நீ என்ன பண்ண...!”

“ஓங்கி ஒரு அற விட்டு ஏய் உன் ரேன்ஞ்சு என்ன, என் ரேன்ஞ்சு என்னனு சொன்ன அழுதுக்கிட்டே ஓடிட்டா”

“டேய் உன் ரேன்ஞ் என்ன சொல்லு”

“எனக்கு என்ன நான் நல்ல படிச்சிருக்கேன் ரொம்ம ஹைய் லெவல்ல இருக்கேன்”

“நீ ஹைய் லெவல்ல இருக்கியா...! இல்லடா உங்க அப்பாதான் ஹைய் லெவல்ல இருக்காரு”

“எல்லாத்தையும் மறந்திட்டியா உங்க அக்காவுக்கு கல்யாணம் செய்ய சொந்தகாரவுங்ககிட்ட உங்க அப்பா சம்பந்தம் பேசினாரு ஆனா அவுங்க பணம், பொருள் கேட்டதுனால, உங்க அப்பா கோவத்துள வெளி இன மாப்பளையை பார்த்து கல்யாணம் செய்யப்போனதும் கல்யாணம் நடந்தப்போ...”

என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது வருண் கண்களை மூடியப்படியே நினைத்துப்பார்க்கிறான், ஒருவர் முறுக்கு மீசையை வைத்துக்கொண்டு வேட்டியை மடித்துக் கட்டியவாரு நிறைய பேர்ருடன் வந்து வேகமாக

“டேய் ராஜேந்திரா... என்னடா பண்ற வெளி மாப்பளையை கூட்டிட்டு வந்து இந்த ஊருல கல்யாணம் பண்றியா வீடமாட்டன்டா”

என்றுச் சொல்லி கல்யாண பெண்ணை பற்றியும் அந்த குடும்பத்தைப் பற்றியும் தவறாகச் சொல்லி கல்யாணத்தை நிறுத்தி விடுகிறார். சொந்தகார்ர்கள் அனைவரும் சென்றுவிடுகிறார்கள், மாப்பளைவீட்டு காரர்களும் வருண் அப்பாவிடம்  “என்னை மன்னிச்சிடுங்க ராஜேந்திரன் நான் உண்ணும் பண்ண முடியாது இந்த ஊர எதீர்ந்து உங்க பெண்ண கல்யாணம் பண்ண முடியாது” என்று சொல்லி அனைவரும் சென்றுவிடுகிறார்கள். வருண் மனமகள் அறையிலிருந்து புது ஆடையை அணிந்துக் கொண்டும் பவுடர் அதிகமாக முகத்தில் பூசிக்கொண்டும் சிரித்துக்கொண்டு வெளியே ஓடிவருகிறான். கல்யாணமண்டபமே காலியாக இருக்கிறது, அப்பா சோகமாக இருக்கிறார். அருகே அந்த பெரிய முறுக்கு மீசைக்காரர்ரும் நிற்க்கிறார்கள், அம்மா அழுதுக்கொண்டே இருக்கிறாள், அம்மா பக்கத்தில் இரண்டு பெண்கள் சொகமாக நிற்க்கிறார்கள், கல்யாண பெண், மனமகள் கோளத்தில் கண்களில் கண்ணீர்ருடன் ஏதும் அறியாமல் நிற்க்கிறாள். சிறிது நேரம் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள் அனைவரது முகத்தையும் வருண் பார்க்கிறான், திடீர்ரெண வருண் அப்பா கோபமாக

“டேய் பரமநாதா நீ கல்யாணத்தை நிறுத்திட்டினா நான் இதே ஊர்ல சொந்தத்தல வேற மாப்பளையை பாத்து கல்யாணம் பண்ணி வைப்பனு பாக்குறியா மாட்டன்டா”

“வேற என்ன பண்ண முயும் உண்ணால”

“டேய் என்கிட்ட வசதி இல்லணு நினைச்சி பேசாத...”

“அப்பறம்...”

“எனக்கு இந்த ஊரும் தேவயில்ல, சொந்தகாரவங்களும் தேவயில்ல எனக்கு எப்படி என் பெண்களை கல்யாணம் பண்ணிக் கொண்டுக்குனும்னு தெரியும்”

என்று சொல்லி அனைவரையும் அழைத்துக் கொண்டு ஆவேசமாக நடக்கிறார், அப்போது வருணை கூப்பிட்டு அவன் தொளில் கையைப்போட்டப்படியே நடக்கிறார். வருண் கண்களை மூடிக்கொண்டு அனைத்தையும் நினைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறான், அதை பார்த்த பழனி தான் பேசுவதை கவனிக்காமல், கண்களை மூடிக்கொண்டு எதையோ யோசித்தப்படி நிற்க்கிறான் என்று நினைத்து கோபமாக

“டேய் நீ எவ்வளவு சொன்னாலும் திருந்தமாட்டியா...”

என்று திட்டிக்கொண்டே அவன் தோளில் கையை வத்து ஆட்டுகிறான். வருண் கண்முலித்துப் பார்க்கிறான் கண்கள் சோக நிலையில் கலங்கி இருக்கிறது, பழனி மீண்டும் அவனை திட்டுகிறான்.

“டேய் அது எப்படிடா எல்லாத்தையும் மறந்து ‘வண்டி’ வாங்கிதறலனு உங்க அப்பாகிட்டயே கோச்சிக்கிட்டு என் கூட வேலைக்கு வந்த டேய் நீ நல்லா படிச்சி முடித்து வேலைக்கு போனா முதல் மாத சம்பளத்திலே ஒரு வண்டி வாங்கிடலாம்டா”

என்கிறான் பழனி, ஆனால் வருண் அவன் பேசுவதை கேட்டப்படியே ஆள்ந்த சிந்தனையில நிற்க்கிறான், பழனி மீண்டும்

“டேய் நீ வண்டி வாங்கனும்னு ஆசப்பட்டது ஒரு நல்ல விசியம்தான், ஆனா உணக்கு வாங்குனும்னு நினைச்சிருக்க கூடாது உங்க அப்பாவுக்கு வங்கிதற நினைத்தாவது பார்த்துருக்கனும், ஏனா உங்க அப்பா ஊரிலிருந்து வந்து மூன்று வருசமா ஒரு பழைய சைக்கிளை தான் வச்சிருக்காரு...”

என்று பேசிக்கொடே இருக்கும் போது திடீர்ரெண வருண்

“டேய் பழனி எனக்கு ஒரு உதவி பண்றியா”

என்று கேட்டதும் பழனி கோபமாக பேசாமல் நிற்க்கிறான், வருண் சிறுது நேரம் அவன் முகத்தைப் பார்த்து விட்டு மீண்டும்

“டேய் ‘பாரதியை’ பார்த்தா அவதான் என்க்கு மனைவினு சொல்லிடு ஆனா கொஞ்ச நாளைக்கு காத்திருக்க சொல்லு, கடமைகள் இருக்கு...”

என்று பேசிக்கொண்டே நடக்க ஆரம்பிக்கிறான், பழனி உடனே “டேய் எங்கடா போற...” என்று கூப்பிட அவன் காதில் வாங்காமல் மண்டபத்தை விட்டு வேளியேறுகிறான். மனதுக்குள்ளே தெளிவாய் பல விசியங்களை சிந்தித்தப்படியே மண்டபத்தை விட்டு வெளியே நடந்து போகிறான்.

மாலை காற்று வீசிக்கொடுடிருக்கிறது, சூரியன் வடபழனி கோவில் கோபுறத்தில மறைகிறது, அதன் மெல்லி ஒளியும், காற்றும் சேர்ந்து மாலை பொழுதாய் மாற்றிக்கொண்டிருக்கிறது, வருண் தெளிவாண முடிவில் வேகமாக நடக்கிறான், அப்போது பேருந்து நிற்க்கும் இடத்தில் வேலைக்கு வரும் போது பேருந்தில் பார்த்த அதே பெண் பேருந்து நிற்க்கும் இடத்தில் நிற்க்கிறாள், அவள் வருண் வருவதை பார்த்து விடுகிறாள், உடனே அவள் மனதுக்குள்

“இவன் என்னை பார்க்க தான் கஷ்டப்பட்டு தேடி வருகிறானோ...”

என்று நினைத்து அதிர்ச்சியாக பாத்துக்கொண்டிருக்கிறாள் ஆனால் வருண் அவளை பார்க்காமல் தெளிவான மனதோடு உருதியாக நடந்து செல்கிறான், கோவில் கோபுறத்தில் சூரியன் முற்றும் மறைகிறது.

முற்றும்.
Monday, October 18, 2010

இரு திருமணம் பாகம் 4                             பாகம் - 4


     பெண் வீட்டு ஐயர் ஒருவர் வருணை கூப்பிட்டுக் கொண்டு ‘லட்டு’ கூடையை

“இந்தாப்பா லட்டு கூடையை தூக்கிண்டு என் பின்னாடியே வா” என்றதும் வருண்

“சரிங்க...” என்று சொல்லி அவர் பின்னாடியே தூக்கிக் கொண்டு சிரித்த முகத்துடன் செல்கிறான். அப்போது திடீரெண சில அக்கரகார இளஞர்கள் வேகமாக வந்து அந்த ஐயர்ரிடம்

“மாமா நாங்கோ தூக்கிண்டு வறோம்”

என்று வருணை முறைத்துப் பார்த்தப்படி லட்டு கூடையை வருணிடமிருந்து வாங்கிக் கொண்டு வருணை வில்லனைப் பார்ப்பதுபோல் பார்த்து தூக்கிச் செல்கிறார்கள். வருண் அவர்கள் தூக்கிச் செல்வதையே பார்த்து சோகமாக முகம் சுழித்து திரும்புகிறான், அப்போது வேல் எதிரே வருகிறார் வருணைப் பார்த்துவுடன் கோபமாக

“என்ன, நீ லட்டு தூக்கிட்டு போவல இங்க நின்னுகிட்டு என்னடா...செய்ற” என்றதும் வருணுக்கு கோபம் வந்து

“இங்க பாருங்க...”

என்று கோபம்பட அங்கே பழனி வருகிறான் வருண் கோபமாக இருப்பதைப் பார்த்து அருகில் வந்து

“என்னடா வருண்”

“நாண் ஒண்னும் பண்ணலடா அவுங்கதான் நாங்க பாத்துக்குறோம்னு வாங்கிட்டு போய்ட்டாங்கடா” என்றதும் உடனே பழனி

“சரி... சரி... போடா போய் வேலையை பாருடா”

என்று கோபமாக திட்டி வருணை அனுப்பிவிட்டு பழனி வேல்லிடம்

“அண்ணா நான் பாத்துக்குறேணா” என்றதும் அவர் கோபமாக

“சரி... சரி... நீயும் போய் வேலையை பாரு”

என்று சொல்லி கீழே சென்று மாப்பளை வீட்டாரிடம்  பேசிக்கொண்டிருக்க, வருண் கோபமாக சென்று ஒரு இடத்தில் நின்றுக் கொண்டிருக்கிறான். அப்போது அந்த பெண் வருண் நிற்பதைப் பார்த்து அருகில் வந்து

“ஏங்க உங்களதான் உங்க பெயர் என்ன”

என்றதும் வருண் கோபமாக திரும்பி அவளை பார்த்து

“பெயரை கேட்டு என்னப் பண்ண போற வேலையைப்பாத்துக்கிட்டு போ...”

என்றதும் அந்த பெண் பயந்து அதிர்ச்சியாகி சோகத்துடன் திரும்பி செல்கிறாள். வருண் கோபமாக தலையை சொரிந்தப்படியே நிற்க்கிறான் அப்போது பழனி பின்பக்கமாக வந்து தோளில் கைவைத்து

“என்னடா அவர்கிட்ட போய்...”

“அவரு என்ன சொன்னாருனு தெரியுமா...”

“சரி விடுடா இன்னும் கொஞ்சம் நேரம் தானே”

என்று சொல்லி தோளில் கைபோட்டபடி சமயல் அறைக்குள் நடக்கிறார்கள் இவர்கள் மற்றும் அனைவரும் சேர்ந்து அனைத்து உணவுகளையும் பெரிய, பாத்திரத்தில் மேலே தூக்கிச் செல்கிறார்கள்.

மதிய உணவுக்காண சமயல் அனைத்தும் முடிந்து, உணவு உபசரிப்புக்கான வேலைகள் விருவிருப்பாக நடக்கிறது.

ஆறு வகை பொரியல், மூன்று வகைகூட்டு, அவியல், பருப்பு(நெய்), தயிர்பச்சடி, மாங்காய் ஊர்காய், அப்பளம், சிப்ஸ், மோர் மிளகா, வடை, சாம்பார், வத்தகுழம்பு, மோர்குழம்பு, ரசம், தயிர், மோர், புளியோதரை சாதம், கொத்தமல்லி சாதம்,  சாதம், வாழை பழம், என பல வகையான உணவுகளால்,, உபசரிப்பு நடக்கிறது.

வருண் அனைவருக்கும் சாப்பிட இலைப் போட்டுக்கொண்டிருக்கிறான், அப்போது ஒரு பெரியவர் “ இலை எப்படி போடனும்னு தெரியாது” என்று வேகமாக திட்டுகிறார்.

அதை கேட்ட வேல் அருகில் வந்து “ இலை போடுறது பெரிய விசியமே இல்ல இதோ பாரு அகலமா இருக்குற பக்கத்த சோத்து கைப்பக்கம் போடு குறுகியப்பக்கத்தை இடது கைப் பக்கம் போடு” என்கிறார்.

வருண் இலையை சரியாகப் போட்டுக்கொண்டிருக்கிறான். உணவு உபசரிப்பு இரண்டு மணி நேரத்துக்கு மேல் நடக்கிறது,

வருண், பழனி அருகில் வந்து “டேய் பழனி நான் பாத்ரூக்கு போய்ட்டு வறேன்டா”
என்றுச் சொல்லி சென்றுவிடுகிறான். பாத்ரூம்க்குச் சென்று அரைமணி நேரம் ஆகிறது, வருண் வரவில்லை, ஒருமணி நேரம் ஆகப்போகிறது அப்போது திடீரெண அந்த பெண்ணின் அப்பா பெரியவர்

“என் பொண்ணு... பாரதியை கானும்... வேல் ஐயா...”

என்று கத்திக்கொண்டு ஓடி வருகிறார். அதை பார்த்த வேல் ஓரமாக அழைத்துச் சென்று விசாரிக்கிறார். அப்போது ஒருவர் “யாரு பாரதிதானே மண்டவத்துக்கு வெளியே அழுதுக்கிட்டே போனாள் நான் பார்த்தேன்”

என்றதும் பழனி அதிர்ச்சியாகிறான் மனதுக்குள்ளயே வருண் தான்  பாரதியை ஏதோ செய்திட்டானோ இல்ல கூட்டிட்டு போய்ட்டானோ, என்று மனதுக்குள்ளேயே பேசிக்கொண்டு வேளியே வருகிறான்.

அப்போது பாத்ரூம்க்கு வெளியே வருண் சுவரில் கைவைத்து சாய்ந்தப்படியே நிற்க்கிறான், அதை பார்த்த பழனி கோபமாக

“டேய் நீ எத்தனை தடவ சொன்னாலும் திருந்த மாட்டியாடா  உங்க அப்பா உன் குடும்பம், எல்லா எந்த நிலையில ‘வந்தவாசி’-லிருந்து சென்னைக்கு வந்திங்கனு மறந்திட்டியா”

“இல்லடா நா... ஒன்னும் பண்ணல அந்த பொண்ணுதா...”

“டேய் உங்க அப்பா எத்தனை தடவை என்கிட்ட வந்து கவலைப்பட்டு பேசிருக்காரு தெரியுமா”

“டேய் பழனி நான் சொல்றத கொஞ்சம்...”

“உங்க அப்பா எவ்வளவு கவலையாக நான் 4500 ரூபாய் தான் சம்பலம் வாங்குறேன், இந்த சம்பளம் வீடு வாடைகைக்கும், வருணை படிக்கவைக்கறதுக்கும், வீட்டுசெலவுக்கும் தான் சரியா இருக்கு நான் எப்படி என் மூனு பெண்களுக்கும் கல்யாணம் பண்ண போறேனோ ஒன்னும் புரியல, என்க்கு ஒரே நம்பிக்கை வருண் தான்னு எத்தனை தடவை என்கிட்ட சொல்லிருக்காருனு தெரியுமா...”

என்றதும் வருண் முகம் சோகத்தில் மாறி, தலை குனிந்தப்படியே நிற்க்கிறான், பழனி மீண்டும்

“டேய் உங்க அக்க கல்யாணம் எப்படி நின்னுச்சி நீங்க எப்படி, எந்த நிலையில சென்னைக்கு வந்திங்க...”

என்றதும் வருண் யோசித்தபடி அவன் கண்கள் கலங்கி கண்களிருந்து கண்ணீர் வடிகிறது, அப்போது ‘பாரதியின்’ அப்பா அந்த பெரியவர் அழுதுக்கொண்டே வேகமாக ஆவேசமாக இவர்களை நோக்கி வேகமாக வருகிறார்.

தொடரும்...


Monday, October 11, 2010

"இரு திருமணம்" - தொடர்கதை பாகம் 3

     வேல் வேகமாக இவர்கள் இருவர்களையும் நோக்கி வர இருவரும் ஒருவருக்கொருவர் முலித்து பார்த்துக் கொண்டுடிருக்கிறார்கள். வேல் இருவரின் அருகில் வந்து,

“என்ன பழனி அங்க வேல எவ்வளவு இருக்கு பொருப்பு இல்லாம இங்க நின்னு பேசிக்கிட்டு இருக்க”

“ஒன்னும் இல்லணா சும்மாதாணா”

“சரி... சரி... கூப்பிட்டுட்டு போ சீக்கரம்” என்றதும் பழனி மெதுவாக

“டேய் வருண் வாடா”

என்று பழனி வருணை கூப்பிட்டு கொண்டிருக்க அவன் வேல்லை கோபமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவர் வழக்கம் போல் எல்லாரிடமும் வேலைச் சொல்லிக் கொண்டும், அவனை பார்க்காமல் இருக்கிறார், பழனி மெதுவாக வருண் கையை பிடித்து இழுத்த வாறே,

“வாடா வருண்” அவன் வறாமல் பார்த்தபடியே இருக்கிறான்.

“வாடா...” என்று மீண்டும் கூப்பிடுகிறான்.

பழனி மெதுவாக வருணை அழைத்துக் கொண்டு இருவரும் வருகிறார்கள், அங்கே நிறைய பேர் அங்கே இருக்கும் பாத்திரத்தை இறக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஒரு பெரியவர்க்கு உதவியாக ஒரு பெண் பாத்திரத்தை தூக்கிச் செல்கிறாள். அந்த பெண் வருணை மறைந்து, மறைந்துப் பார்க்கிறாள்.அந்த பெண் பார்ப்பதை வருண் பார்த்துவிடுகிறான், அந்த பெண் உடனே பாத்திரத்தில் முகத்தை மறைத்தப்படியே செல்கிறாள். அப்போது பழனி

“டேய் வருண் வாடா இத தூக்கு இறக்குவோமடா”

“டேய் என்னடா இவ்வளவு பெரிய பாத்திரத்தை தூக்கச் சொல்ற”

“டேய் லேசாதாண்டா இருக்கு தூக்குடா”

என்று சொல்ல இருவரும் சேர்ந்து தூக்கி கீழே இறக்குகிறார்கள். அப்போது பாத்திரம் தேய்க்கும் இடத்தில் நிறையப் பேர் பாத்திரத்தை வேக, வேகமாக தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா பைப்புகளிலும் தண்ணீர் வேகமாக ஊற்றிக் கொண்டுடிருக்கிறது, பாத்திரத்தில் தண்ணீர் நிறைய்துக் கொண்டு இருக்கிறது.

வருணும், பழனியும் பாத்திரத்தை தூக்கி வருகிறார்கள், அப்போது பாத்திரம் தேய்க்கும் ஒரு பெரியவர் பக்கத்தில் நின்று அதே பெண், உதவிச் செய்துக்கொண்டு இருக்கிறது. அந்த பெண் வருண் வருவதை பார்த்துக் கொண்டு இருக்கிறது. வருண்ணும் பார்த்துக் கொண்டே வருகிறான். அப்போது அந்த பெரியவர்

“தம்பி பழனி பக்கத்துல தூக்கிட்டுவா எல்லாரும் தூரமாகவே வைத்திட்டு பேயிடுறாங்க தம்பி”

“சரிங்க...ஐயா”

என்று அருகில் பாத்திரத்தை வைக்கிறார்கள். அந்த பெரியவர் மீண்டும்,

“பழனி மேல பாத்திரம் எல்லாத்தையும் இறக்கியாச்சா”

“இன்னும் கொஞ்சம் இருக்கம்”

“அப்படியா... சரி எல்லாத்தையும் இறக்கிடுங்க”

என்று இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது, அந்த பெண்ணும், வருண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டுடிருக்கிறார்கள். அப்போது வருண் அந்த பெண்ணின் கையைப் பார்க்கிறான், கையில் சோப்பு நுறையும் பாத்திரம் கழுவி ஓடும் தண்ணீர், தக்காளி,வெங்காயம்,பருப்பு என சோப்பு நுறை கலந்து ஓடும் தண்ணீரில் நின்றுக் கொண்டிருப்பதை பார்த்து முகத்தை திருப்பிக் கொள்கிறான்.

அப்போது சமயல் அறையிலிருந்து ஒரு சமயல்காரர் வேளியே வந்து பழனியை பார்த்தவுடன்,

“பழனி ‘வேல்’ அண்ணா எங்க”

“அவரு மேல இருந்தாறே”

“அப்படியா இன்னும் 50 தேங்கா வேணும்”

என்று பேசிக்கொண்டு இருக்கும் போது வேல், பின்பக்கமாக வந்து கோபமாக

“தேங்கா இல்லனா என்ன தான் தேடுவியா”

“இல்லண்ணா...”

“என்ன நொல்லணா...யாராவது இரண்டு பசங்களை கூப்பிட்டு தேங்காவ உடைத்து துருவ சொல்ல வேண்டியது தானே” என்று சொல்லி பழனியை பார்த்து

“டேய் பழனி”

“சொல்லுங்கண்ணா”

“அந்த பையனை கூட்டிட்டு அந்த தேங்காவ உடைத்து துருவி கொடுடா”

என்றதும் பழனி “வருண் வாடா” என்று கூப்பிட்டு அழைத்துச் செல்கிறான், அங்கு தேங்காய் மூட்டையிலிருந்து, 50 தேங்காயை என்னி எடுத்துக் கொண்டு உடைக்க ஆரம்பிக்கிறார்கள், பழனி  கட்டையில் தேங்காவை வேக வேகமாக உடைத்துக் கொண்டிருக்க, வருண் மெதுவாக ஒரு தேங்காவை பல முறை கட்டையில் அடித்துக் வட்டமாக உடைக்காமல் தூள்லாக உடைத்து விடுகிறான். அதை பார்த்த பழனி

“டேய் வருண் பொருமையா தேங்கா நடு வரும்புல படும் படி கட்டையில அடி, வட்டமாக உடையும்” என்றதும் வருண்

“அப்படியா...”

என்று உடைக்க ஆரம்பிக்கிறான், அருகில் பக்கத்து அறையில் நிறைய பேர் கையில் கத்தியை வைத்துக் கொண்டு வேகமாக காய்கறியை வெட்டிக் கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் வெட்டுவதிலிருந்து சத்தம் வெளியே வருகிறது, அந்த சத்தத்தை வருண் தேங்காய் உடைத்து மறைத்துக் கொண்டிருக்கிறான்.

அப்போது காய்கறி வெட்டும் ஒருவர் ஒரு சிறியப் பாத்திரத்தை எடுத்துக் வந்து வருணை பார்த்து

“டேய் தம்பி இந்த பாத்திரத்தில தேங்கா தண்ணியை புடி”

என்கிறார் அதை பார்த்த பழனி அவனிடம்

“சோமு தேங்காவ சீக்கரம் உடைச்சி துருவுனுண்டா”

“நா... என்ன தேங்காவ உடைக்க வேனானா சொன்ன”

“ அதுக்கு இல்லடா...”

“தம்பி நீ அந்த பாத்திரத்துல புடி” என்றதும் வருண் கோபமாக

“சரி... சரி..”

என்று உடைக்கிறான், ஒரு தேங்காயயை உடைத்து தண்ணியை படித்துவிட்டு மறு தேங்காயை உடைக்கிறான், அப்போது வருணின் விரல் சதை தேங்காவில் மாட்டி விடுகிறது.

“அம்மா...”   “அய்யோ...”   டேய் பழனி வாடா

என்று கத்தவும் பழனி ஓடிச் சென்று விரலை தேங்காவிலிருந்து எடுத்து வடுகிறான்.
“பழனி மெதுவா... பாத்துடா”

பழனி கோபமாக

“டேய் பாத்து உடைக்க மாட்ட”

என்று கோபப்பட்டு திட்டவும் வருண் விரலை பிடித்தப்படி கீழே அமர்ந்து விடுகிறான். பழனி உடனே

“சரி நீ ஒக்காரு நான் பாத்துக்கிறேன்”

என்று சொல்லி அனைத்து தேங்காய்யும் வேகமாக உடைத்துக் கொண்டுடிருக்கிறான். அப்போது தேங்கா தண்ணீர் கேட்டவர் வேகமாக வெளியே வந்து, அந்த பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு

“தம்பி ரொம்ப வலிக்குதா”

என்று சொல்லிக் கொண்டே பழனி தேங்காயை உடைக்க இவர் தண்ணீரை பிடித்துக் கொள்கிறார். அதை வருண் பார்த்து

“ச்ச... ”என்று பல்லை கடித்துக் கொள்கிறான்.


பழனி அனைத்து தேங்காவையும் உடைத்து முடித்து விட்டு உடைந்த தேங்காய் மூடியை அனைத்தையும் ஒரு கூடையில் அள்ளிக் கொண்டு

“வருண் வாடா”

என்று மாவு அறைத்துக் கொண்டிருக்கும் அறைக்குள் அழைத்துச் செல்கிறான். அங்கே இரண்டு ‘கிரேண்டர்’ ஓடிக்கொண்டிருக்கிறது, அதற்க்கு கீழே தேங்காய் துருவுவது ‘கிரேண்டர்’ ஓடும் வேகத்துக்கு சுத்திக் கொண்டிருக்கிறது, அதை பார்த்தவுடன் வருண் விரலை வாயில் வைத்தப்படியே

“இங்க எதுக்குடா கூட்டிட்டு வந்த”

“இங்க தாண்டா தேங்கா துருவனும்”

“டேய் என்னால முடியாது”

“டேய் உன்ன யாருடா செய்ய சொன்னது நீ பேசாம ஒக்காரு”

“டேய் நான் அதுக்குனு சொல்லலடா”

“வேற எதுக்கு... ”
“இல்ல நான் போறண்டா”

“டேய் என்னடா நீ”

என்றதும் வருண் விரலை பார்த்து மீண்டும் வாயில் வைத்தபடி

“டேய் என்னால இவ்வளவு கஷ்டப்பட்டு வேலைச் செய்ய முடியாது”

என்று பேசிக் கொண்டிருக்கும் போது சமயல்காரர் வேகமாக வந்து

“பழனி தேங்கா எல்லா துருவியாச்சா”

“இதோ துருவிக்கிட்டு இருக்கண்ணா”

“சீக்கரம் பழனி”

“முடிஞ்சிருச்சிண்ணா” என்றதும் அவர் போக மீண்டும் வருண்

“பழனி நான் கிளம்புறேன்”

“டேய் நீ இப்ப போனினா உன் விரல் அடிப்பட்டதுக்கு கூட புரோஜனம் இல்லாம போயிடும்டா”

“என்ன சொல்ற”

“இவ்வளவு நேரம் இருந்திட்ட இன்னும் கொஞ்சம் நேரம், மதிய சாப்பாடு முடியும் வரைக்கும்”

“அப்போ இன்னும் வேலை செய்ய சொல்ற”

“இல்லடா மதிய சாப்பாடு முடிச்ச உடனே போய்டு நான் பணம் வாங்கிட்டு வந்திடுறேன்”

என்று சொல்லி பழனி வேகமாக தேங்காய் மூடியை எடுத்து, வேகமாக சுத்திக் கொண்டிருக்கும் தேங்கா துருவதில் தேங்காய் மூடியை அழுத்தி பிடிக்கிறான், தேங்காய் ‘பூ’ போல் தூளாக கீழே கொட்டுகிறது.

அனைத்து தேங்காய் மூடியையும் துருவிட்டு தேங்காய் ‘பூ’ எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு சமயல் அறைக்கு இருவரும் எடுத்து வருகிறார்கள், அங்கே இருக்கும் சமைப்பவர்ரிடம் கொடுக்கிறார்கள்.

“அண்ணா இந்தா எல்லாத்தையும் துருவியாச்சி”

“கொடு பழனி சீக்கரம்”
என்று வாங்கி அவர் வேலையை வேகமாக செய்கிறார், அப்போது ‘வேல்’ வேகமாக பேசிக் கொண்டே சமயல் அறைக்குள் நுழைகிறார்.

“நேரமாச்சி எல்லாம் ரெடியாயிருச்சா”

“ரெடியாகிட்டே இருக்கு” என்றால் சமைப்பவர் ஒருவர்

“ரெடியாகிட்டே இருக்கா எப்போ... சீக்கரம்”

என்றதும் மற்றோருவர், கோபமாக

“பாதி ரெடியாகி முடிஞ்சிரிச்சி இன்னும் பாதி அடுப்புல முடிக்கிற கட்டத்துல இருக்கு”

என்றதும் வேல் கோபமாக பழனி பார்த்து

“பழனி ரெடியானது எல்லாத்தையும் மேல தூக்கு”

“தூக்குண்ணா நீங்க போய் பசங்கள வரச்சொல்லு” என்றதும் அவர் கோபமாக

“நான் வரச்சொல்றண்டா நீ சீக்கரம் அந்த பையன வச்சிக்கிட்டு தூக்கிட்டு வா”

என்றுச் சொல்லி வேல் மேலே செல்ல, வருணும் பழனியும் ‘ரசம்’ இருக்கும் பெரிய அண்டாவை தூக்கிறார்கள், அப்போது வருண் தூக்கமுயாமல்

“டேய் தூக்க முடியலடா”

“நல்லா தம்புடிச்சி தூக்குடா”

என்றதும் வருண் தூக்குகிறான் பழனியும் தூக்கி வருகிறான், அப்போது அந்த பெரியோருடன் இருக்கும் பெண் வருணையே பார்க்கிறாள் ஆனால் அதை பார்த்த வருண் முகத்தை திருப்பிக் கொண்டு வேறப்பக்கம் பார்த்துப் படியே தூக்கி செல்கிறான் சிறிது தூரம் சென்ற பிறகு தூக்க முடியாமல் பொத்தென்று கிழே வைத்துவிடுகிறான் அப்போது அண்டாவில்லிருந்த ‘ரசம்’ தலம்பி பழனி கையில் பட்டுவிட உடனே வருண்

“என்னால முடியலடா என்ன விடுடா நான் போறேன்”

என்றுதும் பழனி கையை உதறியப்படி கோபமாக

“என்னடா போற, போறனு போறதா இருந்த போடா”

என்றதும் வருண் அதிர்ச்சியாகி , சோகத்துடன் முகத்தை சுழித்துக் கொண்டு தலையை குனிந்து, யோசித்து சிறுது நேர்ம் கழித்து

“டேய் பழனி சரி.... விடுடா தூக்குடா”

என்றதும் பழனி மௌனமாக கையை உதறிப்படி குனிந்து தூக்கிறான் இருவரும் சேர்ந்து தூக்கிச் செல்கிறார்கள். அப்போது மேலே வேல் கல்யாணகார் ஒரு ஐய்யரிடம் பேசிக் கொண்டிருக்கிறார், பழனியும், வருணும் ரசத்தை தூக்கி வருவதை வேல் பேசிப்படியே பார்க்கிறார், இருவரும் ரச அண்டாவை வைத்துவிட்டு வேற தூக்குவதற்க்கு கீழே மீண்டும்  செல்கிறார்கள் அப்போது வேல்

“பழனி நில்லு அந்த பையன் பேரு என்ன”

“வருண்ணா...” என்றதும் வருண்

“ஆமாங்க வருண் ...” என்றதும் வேல்

“இங்க வா இவரோட போய் கீழ ‘லட்டு’ கூடையை தூக்கிட்டுப் போ பொண்ணு வீட்டுகாரவங்களுக்கு ‘லட்டு’ கொடுக்குனுமா”

என்றதும் வருண் முகம் கோபத்தில் கடுப்பில் இருந்தது, திடீரென மகிழ்ச்சி

“சரிங்கண்ணா...”

என்றுச் சொல்லி முகத்தை துடைத்துக் கொண்டும், தலையை நன்றாக வாரிக்கொண்டும், சட்டை சரியாக இருக்கிறதா என்று இழுத்துப் பார்த்துக் கொண்டு வேகமாக செல்கிறான்

தொடரும்...

Monday, October 4, 2010

"இரு திருமணம்" - தொடர்கதை பாகம் 2
பாகம் - 02

பேருந்து சிக்கனலை தாண்டி வேகமாக சென்றுவிட.. வருண் பழனியை கோபமாக

“வரமாட்டேனா கூப்பிட்டுக்கிட்டே இருக்க”

“வருண் வேலை ஆரம்பிச்சிடுவாங்கடா”

“சரி... சரி... வாடா போகலாம்”

என்று வருண் சொன்னதும் இருவரும் திருமணமண்டபத்துக்கு நடந்து செல்கிறார்கள், காற்றில் பேருந்து மற்றும் பல வாகனத்திலிருந்து வரும் புகை காற்றில் கலந்து வீசியபடி அவர்களை கடந்து செல்கிறது.

ரோட்டில் படர்ந்து கிடக்கும் மண் வாகனம் போகும் வேகத்தால் பறந்துக் கொண்டிருக்க பைக்கில் போகுவோர் மற்றும் நடந்து செல்வோர் கையை முகத்தில் வைத்து மறைத்தப்படியே செல்கிறார்கள்.

திருமணமண்டபம் வந்தடைகிறார்கள், மண்டபத்தின் வாசலில் அக்கரகார பெண்கள் மடிசார் கட்டிக் கொண்டு நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

“அண்ணா அவா வந்துட்டாளா ஆத்திலிருந்து வர கொஞ்சம்  நாழியாயிடுது”

என்று பேசிக்கொண்டு பலர் உள்ளே நடந்துக் கொண்டு இருக்க திருமணமண்டபம் அருகில் வருகிறார்கள் உடனே வருண்

“பழனி... ஐய்யர் வீட்டு கல்யாணம் போலருக்கு”

“ஆமாண்டா வாடா”

“டேய் பழனி அப்போ நிறைய பொண்ணுங்க வருவாங்க?”

“அப்போ வேற கல்யாணமா இருந்தாப் பெண்கள் வர மாட்டாங்களா”

“ அப்படி இல்ல...”

“வருண் ஏன்டா இப்படி, நம்ம வேலைக்கு வந்திருக்கோம் பேசாம வாடா”

என்று பழனி சொன்னவுடன் வருண் மவுனமாகிறான். இருவரும் மண்டபத்துக்குள் செல்கிறார்கள், நிறைய சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். மண்டபத்தின் வாசலில் ஒரு பெரிய ஊஞலை பூவால் அலங்காரம் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.


வருண் ‘பூ,’  அழங்காரத்தை பார்த்தபடியே

“அப்பா எவ்வளவு ‘பூ,’ பார்ப்பதற்க்கே ரொம்ப அழகா இருக்குடா”

“வருண் அதை எல்லாம் அப்பரம் பாத்துக்கலாம் சீக்கரம் வாடா”

“சரி... சரி... வாடா போகலாம்”

பேசிக்கொண்டே மண்டபத்துக்கு பின்பக்கம் இருக்கும் படி வழியாக மேலே ஏறுகிறார்கள்.

“பழனி ஏன்டா அந்த பக்கமா கூட்டிட்டுப் போகாம பின்பக்கமா கூட்டிட்டு போற”

“வருண் வேலைக்கு போரம் இந்த பக்கமாதான்டா போகனும்”

“வேலை செய்யும் போதாவது உள்ள போய் பார்க்கலாமா”

“பாக்கலாம்டா ஆனா கையில் ‘காபி’ தட்டுடன்”

“பழனி என்னடா...”

“சரி சரி நான் பாத்துக்குறேன் வாடா”

என்று பேசிக்கொண்டே போக அங்கே ‘வேல்’ என்பவர் போனில் பேசிக்கொண்டே வேளியே வருகிறார்.

“வடபழனி தான்டா ராஜேந்திரன் மாமாவோட அந்த பசங்க ஆறு பேரையும் கூட்டிட்டு வாடா”

என்று பேசிக்கொண்டே இவர்களைப் பார்க்க பழனி

“வணக்கம் அண்ணா”

என்றதும் அவர் போனை பேசி முடித்து, அவர்களைப் பார்த்து

“என்ன பழனி எப்படி இருக்க.. பையன் யாரு”

“அண்ணா என் பிரண்ட்ண்ணா வேலைக்கு கூட்டிட்டு வந்தேன்ணா”

“அப்படியா! ஏற்கனவே வேலை பார்த்திருக்கான”

“இல்லணா காலேஜ் படிச்சிகிட்டு இருக்கான்ணா”

“சரி உள்ள கூட்டிட்டு வா”

என்று சொல்லிவிட்டு அவர் முன்னாடிச் செல்ல இவர்கள் அவரைப் பின் தொடர்ந்து செல்கிறார்கள், ‘வேல்’ ஒரு அட்டைப் பெட்டியிலிருந்து வெள்ளை கலர் சட்டையும், கருப்பு கலர் பேண்டும் எடுத்து

“பழனி இந்தா சீக்கரம் போட்டு கூட்டிட்டு வா” என்று கொடுத்துவிட்டு மீண்டும் போனில் பேசிக் கொண்டே

“ஹலோ சொல்லு, ஆமா 50 லிட்டர் பால்தான் கொண்டு வந்திடுங்க”

பேசிக்கொண்டே வேல் சென்றுவிட  பழனி கையில் இருக்கும் ஆடையை உதறிக்கொண்டே

“வருண் வாடா போய் போட்டிட்டு வந்திடுவோம்”

“என்னடா இத போய்... போட சொல்ற”

“வேலை முடியும் வரைக்கும் இததாண்டா போடனும்”

என்றதும் வருண் அந்த ஆடையை வாங்கி சிறிது நேரம் யோசித்து தலையைச் சொரிந்த படியே

“சரி வாடா போட்டுக் கொண்டு வருவோம்”

என்று பின் பக்கம் சென்று ஆடையை மாற்றிக் கொண்டு இருக்க அந்த பக்கம் வேலைக்கு வந்த பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், வருண்  ஆடையை மாற்றிக் கொள்ள மறுக்கிறான்.

“பழனி அங்க பாருடா பொண்ணுங்க இருக்காங்கடா”

“டேய் அவங்க இருந்தா என்ன நீ பேண்ட்ட மாத்துடா”

என்றதும் தயங்கியபடி மாற்றிக் கொண்டு வருகிறார்கள், வருண் மட்டும் பேண்டிடம் சண்டை போட்டுக் கொண்டு வருகிறான்.

“பழனி பேண்டுல ஜிப்பு இல்லடா”

“சரி இங்கேயே இரு நான் போய் வேற எடுத்திட்டு வரறேனு”

உள்ளேச் சென்று வேற ஆடையை எடுத்து வந்து தந்தவுடன் வருண் பேண்டை மாற்றிக் கொண்டு இருவரும் உள்ளே செல்கிறார்கள். அங்கே வேல் சிலருக்கு வேலை சொல்லி கொடுத்துக் கொண்டு இருக்கிறார். இவர்களை பார்த்தவுடன்

“பழனி நீ ‘டிபன்’ எல்லாம் ரெடியானு பாத்து, எல்லாத்தையும் மேலே எடுத்திட்டு வந்திடு பசங்க அங்க இருப்பாங்க”

“சரிண்ணா”

என்று சொல்லி சென்று விட ‘வேல்’ வருணிடம்

“தம்பி நீ எந்த வேலை செய்வ”

“எந்த வேலை கொடுத்தாலும் செய்வேண்ணா”

“அப்படியா சரி வா...”

அழைத்து செல்கிறார். அங்கே ஏற்கனவே நிறையப் பேர் பல வேலைகளைச் செய்துக் கொண்டு இருக்கிறார்கள், அதில் ஒதுக்குபுறமாக ஒரு ஓரத்தில் பெரிய அண்டாவில் சூடாக இருக்கும் பூந்தியில் சர்க்கரை பாவு (ஜிரா), முந்திரி,திராட்சை,பாதாம் என போட்டு கலந்து பெரிய பெரிய லட்டாக  பிடிதுக் கொண்டிருக்கிறார்கள்.

அவ்வளவு லட்டையும் பார்த்தவுடன் வருண் வாய்யடைத்து நின்றபடி

“அப்பாடி எவ்வளவு லட்டு” என்று வாய்குள்ளயேச் சொல்ல

“தம்பி இவர்களோடச் சேர்ந்து லட்டை பிடி” என்றதும்

“சரிண்ணா” என்று ஆசையாக அமர்கிறான்.

வேல் வருணை பார்த்தத

“இப்ப இந்த வேலையைச் செய், நான் அப்பரமா வேற வேலை தரறேன்”

“ok அண்ணா”

என்றதும் அவர் மற்ற பசங்களை வேலை வாங்க செல்கிறார், வருண் லட்டை உருண்டை பிடித்துக் கொண்டிருக்கும் அனைவரையும் பார்க்கிறான், அவர்கள் கையில் ‘க்ளவுஸ்’ தலையில் ‘தொப்பி’ என அணிந்திருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க அதில் பெரியவர் மட்டும்

“என்ன முழிச்சி பாத்துக்கிட்டு இருக்க இந்தா இதை கையிலும் தலையிலும் போட்டுகிட்டு ஒக்காரு”

“இத போடனுமா”

“ஆமா நீ படிச்சவதானே”

“அதுக்கு”

“கை சுத்தமா இருக்காது, தலை முடி கொட்டும்னு தெரியாது”

என்றதும் வருண் வேகமாகப் போட்டுக் கொண்டு லட்டை பிடிக்க ஆரம்பிக்கிறான், லட்டு கையில் உருண்டை ஆகாமல் கொட்டிக் கொண்டு இருக்கிறது அதை பார்த்த பெரியவர்

“இந்தா... தம்பி இங்க பாரு இரண்டு கையிலும் நல்லா அல்லி பெரிய, பெரிய லட்டாக பிடி சீக்கரம் 1000 லட்டு பிடிக்கனும்”

“ஆயிரம் லட்டா....!”

என்ற ஆச்சிரியத்துடன் லட்டு பிடிக்கிறான். லட்டு பிடிக்க முடியவில்லை. சர்க்கரை பாவு கையில் பட்டு கை சூடாக இருக்கிறது. மிகவும் சிரமப்பட்டு ஒரு லட்டு பிடிக்கிறான். அதை ஒரு பாத்திரத்தில் வைக்கிறான் அது சிறிது நேரம் கழித்து உடைந்து விடுகிறது. உடனே

“அய்யோ என்ன இது”

“தம்பி நிதானமா பொருமையா பிடி... போக போக வந்திடும்”

“சரிங்க”

வருண் மனதுக்குள்ளேயே

“இது வரை ‘லட்டை’ கடையில் தான் பணம் கொடுத்து வாங்கி சாப்பிட்டிருக்கேன்”

“இப்பதான் தெரிகிறது லட்டுக்கு பின்னாடி இவ்வளவு சிரமமான வேலை இருப்பது”

என்று மனதுக்குள்ளேயே பேசிக்கொண்டு தூள் பூந்தியை உருண்டையாக்கி லட்டாக மாற்றிக்கொண்டிருக்கிறான், வருண் வேலை செய்துக் கொண்டிருப்பதை பெரியவர் மௌனமாகப்  பார்த்து மனதுகுள்ளேயே

“பாவம் சின்ன பையன் படிச்சிக்கிட்டு இருப்பான்னு நினைக்கிறேன்”

“தம்பி உங்க பெயர் என்னப்பா”

“வருண்-ங்க... உங்க பெயர்ங்க”

“என் பெயரா... முத்தழகுப்பா”

“அப்படியா...”

“சரி நீ என்ன படிக்கிற”

“Bsc. Computer Science”

“ஓ... அப்படியா...! என் மகனும் அதை தான் படிச்சி முடிச்சிட்டு, அதுக்கு மேல படிக்கிறான்”

என்றதும் வருண் அதிர்ச்சியாக வாயை மூடியபடி

“அப்படிங்களா...!”

பேசிக்கொண்டிருக்க ‘வேல்’ அவர்கள் அருகில் வந்து வருணைப் பார்த்து

“தம்பி உன்னதான் இங்க வா”

“என்னையா”

“ஆமா இங்க வா”
வருண்னுடன் மற்றோரு பையனையும் கூப்பிட்டு

“தட்டில் இலை போடனும் நீங்க இரண்டு பேரும் கீழே போய் ஸ்டோர்ல இலையை வட்டமா வெட்டிக் கொண்டு இருப்பாங்க, போய் வாங்கிட்டு வாங்க”

“சரிங்கண்ணா”

ஸ்டோர் இருக்கும் அறைக்கு நடந்து செல்கிறார்கள். வழியில் சிலர் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருக்க, அதில் அதிகமானோர் வயதானோர் தான், அதில் ஒருவரை உற்று கவனிக்கிறான், அவர் பார்ப்பதற்க்கு மெலிந்தும் கை, கால்களில் நரம்புகள் பின்னிக் கொண்டு தெரிகிறது.

அதை பார்த்துக் கொண்டே நடந்து சமையல் அறைவழியாகச் செல்கிறார்கள், அங்கே பலவகையான உணவை பெரிய, பெரிய பாத்திரத்தில் சமைத்துக் கொண்டிருக்கிறார்கள், வாசனை மூக்கைத் துளைக்கிறது.

அங்கே சாம்பார் வைத்து முடித்தவர்,

“டேய்... தம்பிங்களா இங்க வாங்க, இதக் கொஞ்சம் இறக்கி வைச்சிட்டுப் போங்க”

“நாங்க இலை வாங்க வந்தோம்”

“சரி...  நான் இல்லன்னா சொன்ன..  இதக் கொஞ்சம் இறக்கி வைச்சிட்டு போறது”

என்றதும் அவருடன் சேர்ந்து இறக்கி வைக்கிறார்கள். வருணுக்கு லேசாக கை சுட்டுவிடுகிறது, கையை உதறியபடி மீண்டும் நடந்து சென்று

“அண்ணா இலை கொடுங்க”

“எவ்வளவு”

“எவ்வளவுன்னு தெரியல வாங்கிட்டு வரச் சொன்னாங்க”

“சரி இரண்டு கட்டு எடுத்துட்டுப் போங்க”

வருணும் மற்றொரு பையனும் கையில் ஆளுக்கு ஒரு கட்டாக எடுத்து வந்து வேலிடம் கொடுக்கிறார்கள்.

வேல் ‘டிஷ்யு பேப்பர்’ பண்டலை எடுத்து அதில் ஒன்றை முக்கோணமாக மடித்து, தட்டில் இலைப் போட்டு அதில் இந்த முக்கோணமாக இருக்கும் பேப்பரை வைத்து அவர்களிடம்

“தம்பிங்களா இது மாதிரி எல்லா தட்டிலும் வைங்க”

“சரிங்கண்ணா”னு சொல்லி

எல்லா தட்டிலும் இலை போட்டு, முக்கோணமாக பேப்பரை மடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வுருணை மட்டும் யாரோ ஒரு பெண் வேலையை பார்த்தப்படியே மறைந்துக் கொண்டு வருணை பார்ப்பதை வருண் கவனிக்கிறான், அப்போது வேல் திடீரென கையில் இருக்கும் வாட்சில் நேரத்தை பார்துவிட்டு வேகமாக வந்து

“எல்லாரும் இங்க பாருங்க எல்லாரும் செய்யும் வேலையை நிறுத்திவிட்டுச் சீக்கரம் வாங்க”

எல்லோரும் கலைந்து பேசிக்கொண்டே வருகிறார்கள். மீண்டும் வேல் வேகமாக
“பாதி பேர் இவர்களோடு தட்டில் இலை போடுங்க, பாதி பேர் என்கூட வாங்க” என்று அழைத்துச் செல்கிறார்.

வேலைகள் வேகமாக நடக்கிறது. அனைவரும் பெரிய பாத்திரத்தில் இருக்கும் சாம்பார், பொங்கள் என பலவற்றை சிரிய பாத்திரத்தில் எடுத்து டேபுலில் வைக்கிறார்கள். அவர்கள் வைத்த பாத்திரத்துக்கு அருகில் ஒரு அட்டையில் உணவின் பெயரை எழுதி சப்பாத்தி, பன்னீர் பட்டர்மசாலா, ரவாஇட்லி, சாம்பார் என பல உணவின் பெயர் எழுதி வைக்கிறார் ஒருவர்.

அனைவரும் தலையில் தொப்பியும், கையில் க்ளவுஸ் அணிந்தும் ஒவ்வோரு உணவுகிட்டையும் கரண்டியால் உணவை கிளறி விட்டபடி நிற்க்கிறார்கள்.

வேல் வேகமாக வந்து

“நான் சொல்றத நல்லா கேளுங்க, யாரும் கோபப் படாமல் பாத்து பொருமையா பரிமாருங்க”

“சரியா”

“சரிங்க”

அனைவரும் வந்து சாப்பிட ஆரம்பிக்கிறார்கள் உணவு உபசரிப்பு ஒரு மணி நேரத்துக்கு மேல் நடக்கிறது.

வருண்னுக்கு பசி தாங்க முடியவில்லை, அங்கே வரும் அனைவரும் வசதியானவர்கள், பெண்கள் அழகாக புடவை அணிந்து ஆடம்பரமாக வந்திருப்பதை பார்த்து தலை குனிந்து வேலை பார்க்கிறான்.

ஒருவழியாக அனைவரும் சாப்பிட்டு முடிக்கிறார்கள், சிறிது நேரம் கழித்து வேல் யாராவது வருகிறார்களா என்று பார்த்து கொஞ்சம் நேர்ம் கழிந்து

“சரி எல்லாரும் சீக்கரம் சாப்பிடுங்க மதிய உணவு வேலை ஆரம்பிக்கனும்”

என்றதும் அனைவரும் கலைந்து செல்கிறார்கள், பழனி வருணிடம் வருகிறான்.

“வருண் வா கையை கழுவிட்டு சாப்பிடலாம்”

“டேய் பழனி நான் இவ்வளவு லேட்டா சாப்பிட்டதே இல்லடா”

“விடுடா வேலைக்கு வந்தா கொஞ்சம் அப்படி,இப்படினு தான் இருக்கும்”

“டேய் என்னால பசியோட வேலை பார்க்க முடியாது”

“என்னடா சொல்ற...”

“ஆமடா என்னால வேலை பார்க்க முடியாது”

“டேய் என்னடா இப்பபோய் சொல்ற சொல்லி தானே கூட்டிட்டு வந்தேன்     நீ தான் பாத்துக்கலாம்னு வந்த”

“சொன்னதாண்டா!.. ஆனா இவ்வளவு கஷ்டமா இருக்கும்னு நினைக்கள”

“கொஞ்சம் கஷ்டமாதாண்டா இருக்கும் பொருத்துக்க”

“பழனி வேணாண்டா வேலை பாத்த வரைக்கும் பணம் வாங்கிக் கொடு நான் போறேன்.”

“டேய் பாதிலயே வேலை செய்யாம போனா ‘வேல்’அண்ணா பணம் கொடுக்கமாட்டாருடா”

என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ‘வேல்’ வேகமாக நடந்து வந்தப்படியே...

“பழனி... அங்க என்ன நின்னு பேச்க்கிட்டு இருக்க... சீக்கரம் வா...பாத்திரத்தை எல்லாத்தையும் கீழ தூக்கு”

என்று சொல்லியபடியே அருகில் வருகிறார்.

தொடரும்...