Monday, October 25, 2010

அண்ணாநகர் ஆர்ச் வரை... தொடர்கதை பாகம் 1

                                                     அண்ணாநகர்  ஆர்ச் வரை...

                          பாகம் 01

வில்லிவாக்கம் பேருந்து நிலையம், ஒருவன் கையில் கட்டியிருக்கும் வாட்சியில் நேரத்தை அடிக்கடி பார்த்தபடி நிற்கிறான், தோளில் ஒரு பேக்கை மாட்டிக்கொண்டு,  கையால் தலையைச் சொரிந்தபடி நிற்கிறான், அவன் அருகில் பேருந்து நிலையத்தில் நிறைய பேர் பேருந்துக்காக காத்திருக்கிறார்கள். அப்போது பக்கத்தில் இருக்கும் ஒருவரிடம்

“அண்ணா தியாகராயநகர் போகும் பஸ் 47 எப்பணா வரும்”

“எது திநகர் பஸ்சா அதுக்குதான் நானும் ஒன்னவர்ரா குந்திருக்கேன்”

என்றதும் அவன் வீட்டுக்கு போகும் கவலையில் தலையை சொரிந்தப்படி அங்கேஇங்கே நடக்கிறான், பிறகு யோசித்து பாக்கெட்டில் இருக்கும் போனை எடுத்துப் my amma என்று சேவாகியிருக்கும் நம்பருக்கு கால் செய்கிறான். போனில் எடுத்தவுடன் அந்தப்பக்கத்திருந்து

“டேய் பாலா எங்கயிருக்க வீட்டுக்கு எப்ப  வருவ”

“இல்லம்மா பஸ்க்காகத் தான் காத்திருக்கேன் வந்தவுடனே வந்திரம்மா”

“சரிடா சீக்கரம் வா சப்பாத்தி போட்டு வைக்கிறேன்”

“சரிம்மா பஸ் வருது நேர்ல வந்து பேசுறேன்”

என்று சொல்லி போனை கட்பண்ணிவிட்டு வரும் பேருந்தை பார்க்கிறான் அது 47 தான். உடனே பேருந்தை நோக்கி ஓடுகிறான். அனைவரும ஓடிச் சென்று பேருந்தில் ஏறுகிறார்கள். பாலா ஒரு இருக்கையை பிடித்து அமர்கிறான், அவன் அமர்ந்த இருக்கை பேருந்தின் பின் சக்கரத்துக்கு நேராக மேலே உள்ள இருக்கை அதனால் பாலா சரியாக அமரமுடியவில்லை அவன் கால் முட்டி எதிரே உள்ள இருக்கையில் இடிக்கிறது, சிறிது நேரம் கழித்து பார்க்கிறான் அவன் அமர்ந்திருக்கும் இருக்கையை தவிற மற்ற இருக்கையில் அனைவரும் அமர்ந்திருக்கிறார்கள் அவன் பக்கத்து இருக்கை மட்டும் காலியாக இருக்கிறது.

பேருந்து புறப்படும் நேரத்தில் ஒரு பெரியவர் கஷ்ட்டப்பட்டு பேருந்தில் ஏறி வந்து பாலா பக்கத்தில் அமர்ந்துக்கொண்டே

“இம்புட்டு நேரம் காத்திருந்து இந்த சொகுசுபேருந்து தான் வந்திச்சி அதான் இது புறப்படும் நேரம் வரைக்கும் ஏறாம இருந்து வேற பஸ் வந்தா ஏறுலாம்னு பாத்தேன் அதுக்குள்ள இத எடுத்திட்டாங்க அதான் தம்பி வந்து ஏறிட்டேன்.”

என்றுச் சொல்லிக்கொண்டே அமர்ந்து பாலா முகத்தை பார்க்கிறார், பாலா அவரை பார்த்து மௌனமாக தலையை ஆட்டிக்கொள்கிறான், பிறகு சிறிது நேரம் அந்த பெரியவர் அவர் பாக்கெட்டில் இருக்கும் காசுகளை தேடி எடுத்துக் கொண்டு எண்ணியபடி

“தம்பி சொகுசு பஸ்சுல டிக்கேட் 7ரூபாவா, 10ரூபாவா தம்பி அண்ணாநகர் ஆர்ச் வரைக்கும் போகனும்”

“எவ்வளவுனு தெரியலங்க”

“இல்ல தம்பி என்கூட சின்னவயசுல தஞ்சாவூருல போஸ்ட்மேனாக வேலை பார்த்த நண்பன் ஒருவன், ரொம்ப முடியாம சாகுற நிலையில இருக்குறதா சேதி வந்திச்சி அதனால வற வேகத்துல பணம் எடுத்திட்டு வறல”

“பணத்த விடுங்க பாத்துக்கலாம் நீங்க தஞ்சாவூர்ல போஸ்ட்மேனா வேலை பாத்திங்களா எப்போ...எங்க...!? நானும் தஞ்சாவூர்தான்”

என்று ஆச்சிரியமாக கேட்டுக்கொண்டிருக்க பேருந்து, பேருந்துநிலையத்தை விட்டு வெளியே செல்கிறது.

“ அதுவா தம்பி 1958-ல் முதன் முதல வந்தேன், அதை என்னால இன்னைக்கும் மறக்க முடியல, நான் போன அன்று எல்லா இடத்திலும் ‘நெல்’ அறுவடை காலம், அதனால ஆங்காங்கே யானை கட்டி நெல்லை அடித்துக்கொண்டிருந்தார்கள் அதை பார்ப்பதறக்கு யானையுடன் அந்த ஊர் மக்களே என்னை வரவேற்பது போல் இருந்தது”

என்றுச் சொல்லிக்கொண்டு இருக்கும் போது கன்டக்டர் வந்து “டிக்கெட்... “எங்கபோறிங்க என்றார்,” உடனே பாலா டிக்கெட் வாங்கிக்கொள்கிறான்.

“தம்பி எவ்வளவு டிக்கெட் 10ரூபாங்க” என்றதும் “ அப்பாடி...” என்று பெருமூச்சு விட்டபடி

“தம்பி அப்போ நான் தஞ்சையிலிருந்து எக்மோர் வர்றதுக்கு ஆறணாதான் தம்பி”

என்றதும் பாலா தெரியாததை தெரிந்துக் கொண்டோம் என்ற கோணத்தில் தலையை அசைத்தப்படி “அப்படியா...” என்றான், அந்த பெரியவர் கையில் இருக்கும் சில்லரை காசுகளை பாலாவிடம்

“தம்பி இந்தாப்பா இந்த காசை வைச்சிக்கப்பா”

என்றதும் பாலா “வேனாங்க... என்றுச் சொல்லிக்கொண்டே பேக்கை திறந்து ‘கூல்டிரிங்ஸ்’சை எடுத்து திறந்து குடிக்கிறான், அதை பார்த்த பெரியவர் தம்பி இத குடிக்காத, என்க்கு இன்னும் மறக்கமுடியாத ஒரு விசியம், தஞ்சாவூருக்கு போனதுக்கு மூன்று நாளுக்கு அப்பறம் சும்மா நடந்து சுத்திப்பாத்துக்கிட்டு இருந்தேன்,


எங்கு பார்த்தாலும் விவசாய வேலைகள் சிலர் விதைகளை பாதுகாத்து வைக்கும் வேலையை செய்துக்கொண்டிருந்தார்கள். சிலர் வைக்கோல் போர் போட்டுக்கொண்டிருந்தார்கள், பெண்கள் வரிசையாக நின்று கொண்டு உரலில் ‘நெல்’ குத்திக்கொண்டும், சில பெண்கள் முறத்தில் அரிசி தனியாகவும், தவுடு தனியாகவும் புடைத்துக்கொண்டிருந்தார்கள், ஒருவர் ஒரு சிறுய குடிசையில் மண்பாணை செய்துக்கொண்டிருந்தார். அதை பார்த்தபடியே வீதியின் நடுவில் ஒரு பெரிய வேப்பை மரம் அதன் அடியில் அமர்வதற்கென கட்டைகள். அதில் அமர்ந்து வேப்பமரத்துக் காற்றை சுவாசிச்சேன் பாருங்க.... அந்த சுவாச காற்றை சுவாசிக்க என் சுவாச குழாய் இன்னும் ஏங்கிக் கொண்டிருக்கு தம்பி அப்ப ஒரு அம்மா வந்து

“தம்பி வணக்கம் நீங்க தான் புதுசா வந்திருக்குற தபால்காரரா”

“ஆமாங்க அம்மா நான் தான் இனி தபால் நிலையத்துல இருப்பேன்”

“அப்படிங்களா தப்பி இருங்க வந்திடுறனு”

சொல்லிச் சென்று ஒரு மண் கலயத்துல மோர் எடுத்து வந்து கொடுத்தாங்க நானும் குடிச்சேன் ஆனா அந்த மோரோட ‘ருசி’ என் நாக்குல இன்னும் ஒட்டிருக்கு தம்பி”

என்று பேசிக்கொண்டிருக்கும் போது பாலாவுக்கு போன் வருகிறது, பாலா போனை எடுத்து காதில் வைத்தப்படி ஜன்னல் பக்கம் முகத்தை திரும்பிக்கொண்டு

“ஹலோ... வீட்டுக்கு போயிட்டியா...” என்றதும் போனிலிருந்து ஒரு பெண் குரல்

“ பப்பு நான் வீட்டில்தான் இருக்கேன் நீ வீட்டுக்கு போய்ட்டியா”

“இல்ல செல்லம் இப்ப பஸ்ல வீட்டுக்கு போய்கிட்டுயிருக்கேன்”

“பப்பு இனனிக்கு அப்பாகிட்ட நம்ம காதல சொல்லப் போறேன்”

“ஏய் லூஸ்சு இப்பவேவா சொல்லப் போற. அப்பறம் பாத்துக்கலாம்” என்றதும் அவள்

“பப்பு அப்பா வராங்க அப்பறம் போன் பண்றேன். ‘ஐ லவ் யு’ ” என்றுச் சொல்ல பாலாவும் மெதுவாக

“ ஐ லவ் யு” என்றுச் சொல்லி போனை வைத்து விடுகிறான்.

பக்கத்தில் அந்த பெரியவர் கண்கள் கலங்கியபடி அமர்ந்திருக்கிறார் அதை பார்த்த பாலா

“ஐயா என்னாச்சி எதுக்கு கண் கலங்குறிங்க”

“ஒன்னும் இல்ல தம்பி சும்மா”

என்றதும் பாலா சிறிது நேரம் யோசித்து திடீர்ரெண “ஐயா நீங்க லவ் பண்ணிங்களா” என்று கேட்டுவிடுகிறான் அவர் உடனே கண்களில் வரும் கண்ணீரை துடைத்துக்கொண்டு

“லவ் பண்ணாம யார் தம்பி இருக்கா...” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே பாலா ஆர்வமாக

“அப்போ லவ் பண்ணிங்க...! பொண்ணு தஞ்சாவூர் தானே சொல்லுங்க” என்றான் அவர் சிறிது யோசித்து

“ஆமா தம்பி”  என்று கண்கள் கலங்கிப்படி மெல்லியதாய் சிரித்தார். உடனே பாலா மீண்டும் ஆர்வமாக

“ஐயா எங்க பாத்திங்க, எப்படி பார்த்திங்க சொல்லுங்க” என்றான் அவர்
 மௌனச்சிரிப்பு சிரித்தபடியே

“ஒரு நாள் தபால் நிலையத்துல வேகமா ஜன்னல் ஓரமாக அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போ திடீர்ரென காற்று வேகமாக விசியது ஜன்னல் அருகே ஒரு அழகு தேவதை நூல் புடவை அணிந்து சிரித்தபடியே வந்துநின்றாள், நான் காற்றில் உறைந்துபோனேன், பிறகு அவள் வேகமாக பேசிய போது தான் என்னை நான் உணர்ந்தேன் அவள் முதலில் என்னிடம் கேட்டது...”

“ஐயா எனக்கு ஒரு உதவி செய்விங்களா” என்று கேட்டாள் சரித்த முகத்துடன் நான் என்னை அறியாமல்

“சொல்லுங்க...” என்றேன் அவள் தயங்கியப்படி

“ஐயா நம்ப தஞ்சாவூர் கோயில் போட்ட 1000ரூபாய் நோட்டு இருக்கா... “நான் பார்க்கனும் ரொம்பநாள் ஆசையிங்க” என்றாள் நான் உடனே

“ஒ... இருக்கே” என்றேன் அவள் உடனே ஆர்வமாக

“எங்க..., எங்க... காட்டுங்க” என்றால் நான் உடனே

“வரும், நான் அப்பறமா காட்டுறேன்னு சொன்னேன்” என்றவுடன் பாலா

“அப்போ! 1000ரூபா நோட்ட காட்னிங்களா, அவங்ககிட்ட பேசினிங்களா” என்றான் ஆர்வத்துடன்,

“இம்... காட்டினேன் மூன்று மாதத்துக்கு அப்பறம்”

என்றுச் சொல்லிக் கொண்டிருக்க ரோட்டில் பேருந்து சென்றுக்கொண்டிருக்க ஜன்னல் வழியாக இருபுறமும் பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்தார். அப்போது பேருந்தில் ஒருவர் ஆடையில் அமெரிக்கா என்று பதித்திருந்தது, அதை பார்த்து அமைதியாக இருந்தார் பேருந்து அண்ணா ரவுண்டானத்தை நோக்கி நெருங்கியது அவர் திடீர்ரென

“தம்பி உணக்கு ஒன்னு தெரியுமா அப்போ... வேளிநாட்டிலிருந்து நிறையா பேர் இங்க தான் வந்து வெளிநாட்டு பொருள் விற்பனை கண்காட்சி போட்டிருந்தாங்க அதை பாக்க நான், என் நண்பர்கள் அனைவரும் ஆற்றில் வந்து குளிச்சிட்டு வந்து பார்ப்போம்”

“அப்படியா...!” என்று ஆச்சிரியமாக கேட்டு அண்ணாநகரை ஜன்னல் வழியாக தலை நிமிற்ந்து பார்த்துக்கொண்டான், பாலா மீண்டும்

“ஐயா 1000ரூபாய் நோட்ட காட்டிட்டிங்க அப்பறம் என்னாச்சி”

“என்ன தம்பி இவ்வளவு ஆர்வமா இருக்க,” என்றதும் அவன் “சொல்லுங்க...” என்றான்

“அவளிடம் என் காதலை சொன்னேன் அதற்கு அவள் என்ன சொன்னால் தெரியுமா”

“உங்களோடு சேர்ந்து 100 வருடத்துக்கு மேல் வாழனும்” என்றாள் திகைத்துப்போனேன் என்றார் பெரியவர். உடனே பாலா

“ஐயா இப்போ அவங்களோட சேர்ந்து தானே வாழ்ந்துகொண்டிருக்கிங்க” என்றதும்  பேருந்து சென்றுக்கொண்டிருக்க அவர் ஜன்னல் காற்றில் பார்த்தப்படியே  

“ அதல்லாம் விடுங்க தம்பி எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை இருந்துச்சு
தஞ்சை பெரியகோயில் 1000 ஆண்டு நிறைவு விழாக்கு போகனும்னு இருந்தேன் ஆனா அதும் நடக்காம போச்சு. இப்போ கடைசி ஆசை இந்த 1000 ஆண்டு முடியறத்துக்குள்ள தஞ்சை பெரியகோயிலுக்கு போயிடனும்...” என்று பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென “தம்பி அண்ணாநகர் ஆர்ச் வந்திருச்சி”

என்றதும் பாலா அவசரமாக “ஐயா எனக்கு ஒரு உதவி அந்த 1000ரூபா நோட்ட காட்டுங்க என்கிறான் அவரும் காட்டுகிறார்.

“இந்தாங்க தம்பி”

 என்று காட்டி, தம்பி நம்ப இளமைக் காலத்தை நினைச்சி பாக்குறப்ப இனிமையா இருக்கனும் அதவிட்டுட்டு அழுகக்கூடாது “பாத்துங்க தம்பி காதலிக்கிறிங்க...”

என்று பேசிக்கொண்டிருக்க பேருந்து நிற்கிறது அந்த பெரியவர் பேருந்தை விட்டு இறங்கிக்கொண்டே “தம்பி போய்ட்டு வரம்ப்பா” என்கிறார் பாலா “சரிங்க” என்கிறான் சிறிது நேரம் யோசித்து

“இச்ச... அவர் பெயரைக் கூட கேட்களியே”  என்று வேகமாக ஐயா உங்க பெயர் என்ன என்கிறான் பேருந்து சென்றுவிடுகிறது. பாலா ஜன்னல் வழியாக அவரை திரும்பி பார்க்கிறான். அவர் ரோட்டை கடந்து செல்கிறார். பாலா மீண்டும் கவலையாக முகத்தை திருப்பிக் கொள்கிறான், கையில் பார்த்தால் அந்த 1000ரூபாய் நோட்டு இருக்கிறது. உடனே அதிர்ச்சியாக பஸ் நிறுத்துங்க...! என்று கத்தியப்படி இறங்க படிக்கு ஓடுகிறான். பேருந்து தியாகராய நகரை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது, PVR cinemas நன்றாக தெரிய பேருந்து வளைந்து சென்று இருளில் மறைகிறது.


தொடரும்...


5 comments:

 1. wow..nice story... the way you wrote is good too.. will read past stories too

  ReplyDelete
 2. நன்றி அப்பாவி தங்கமணி அவர்களே தொடர்ந்து படியுங்கள்.

  தொடர்ந்து எழுதுகிறேன்.

  ReplyDelete
 3. வணக்கம் கமல்,
  கதை நல்ல தொடக்கம்..! நல்லாயிருக்கு... அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன்!

  -
  DREAMER

  ReplyDelete
 4. நன்றி சார் தொடர்ந்து படியுங்கள்

  ReplyDelete
 5. unnai solli kolvathil santhoasa padukiren.
  i like you very much da. by jeyaraj

  ReplyDelete