Sunday, November 28, 2010

அண்ணாநகர் ஆர்ச் வரை - பாகம் -2 (பாரிமுனை ஓவியம்)

   


                       பாரிமுனை ஓவியம்

                                    பாகம் - 2

அதிகாலை சூரியன் மெல்ல எழுகிறது, ஒரு இருண்ட அறையில் பாலா தூங்கிக்கொண்டிருக்கிறான். அறைக்கு வெளியே சாமி பாட்டும் கற்பூரம் காட்டி மணி அடிக்கும் சத்தமும் கேட்கிறது. பாலா போர்வையை நன்றாக இழுத்துப்போத்திக்கொண்டு  தூங்குகிறான். அப்போது திடீரென “இறகைப் போலே அலைகிறேனே உந்தன் பேச்சை கேட்கையிலே...” என்ற பாட்டுடன் பாலா ஃபோனுக்கு கால் வருகிறது, பாலா அந்த பாட்டின் சத்தத்தை கேட்டு நெளிந்தப்படி மெதுவாக எழுந்து பார்க்கிறான், போனில் my wife என்ற பெயரைப் பார்த்தவுடன் ஃபோனை ஆன் செய்து

“சொல்லுடி...செல்லம்” என்றதும் போனில்

“ÀôÒ ¨¿ðÎõ §À¡ý ¦ºöÂÄ þýÉ¢ìÌ ºñ§¼, ¸¡¨Ä¢§Ä ஃ§À¡ன் ¦ºöÅ, இரண்டு பேரும் ±í¨¸Â¡ÅÐ §À¡Ä¡É¡...” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே பாலா

“ஏய் செல்லம் நான் சொல்றத கொஞ்சம் கேளுடி நேற்று பஸ்ல வரும்போது ஒரு பெரியவர்கிட்ட பேசிக்கிட்டு வந்தேன். அப்பகூட நீ போன் செய்த உன் கூட பேசிக்கிட்டுயிருந்தேன்,” என்று சொல்லிக்கொண்டிருக்க ஃபோனில் அவள்

“அதுக்கு என்ன மறந்திட்டியா”

“ஏய் அது இல்லடி செல்லம்... அவர் இதுவரையும் யாரிடமும் சொல்லாத அவர் காதல் கதையையும் இன்னும் பல சுவாரசியமான தகவல்களையும் சொன்னார். அதுமட்டும் இல்லாம தன் காதல் ஞாப¸¡ர்த்தமா பல வருடங்களாக பாதுகாத்து வைத்திருந்த தஞ்சை பெரியகோயில் போட்ட 1000ரூபாய் நோட்டை  என்னிடம் காட்டினார். ஆனா அவர் போனதுக்கு அப்புறம் பார்த்தா அந்த 1000ரூபாய் நோட்டு என்கிட்ட இருக்கு!. அப்பறமா இறங்கி ரொம்பநேரமா அவரை தேடி, வீட்டுக்கு வந்தேன் அதனாலதான் உனக்கு ஃபோன் பண்ணமுடியல”

“சரி இப்போ அந்த 1000ரூபா நோட்ட என்ன பண்ணபோற...”

“இந்த நோட்டுல இரண்டு பக்கமும் இரண்டு அட்ரஸ் இருக்கு” என்றதும் ஃபோனில் அந்தப் பெண்

“அப்போ இந்த அட்ரஸ்ஸ கண்டுபிடிச்சி கொண்டுபோ கொடுக்கப் போறியா...!”

“ஆமா... இந்த காதல் சின்னத்தைச் சேர்த்து வச்சா நம்ப காதலை யாராவது ஒருத்தவங்களாவது பேசுவாங்கள்ள, செல்லம் நம்ப ஈவ்னிங் மீட்பண்ணலாம்...” என்று பேசிக்கொண்டிருக்கும் போது அறைக்கு வெளியிலிருந்து பாலா அம்மா

“டேய் பாலா எவ்வளவு நேரம்டா தூங்குவ எழுந்திருடா...” என்று கூப்பிடும் குரலை கேட்டதும்

“இதோ வரம்மா...” என்று சொல்லிவிட்டு ஃபோனில் “செல்லம் நான் அப்பறம் பேசுறேன்” என்றுச் சொல்லி ஃபோனை வைத்துவிட்டு, அறையை விட்டு வெளியே வருகிறான். அவன் அம்மா

“யாரு மகாவா... காலையிலேயே ஆரம்பிச்சிட்டியா...”

“இல்லம்மா சும்மா பேசிக்கிட்டு இருந்தோம்”

“சரி விடு, ரொம்ப வலியாத...” என்றதும் பாலா சிறிது நேரம் சென்று

“அம்மா கொஞ்சம் வெளியில போய்ட்டு வரம்மா”

“சரி போய்ட்டு வா மதியம் சாப்பாட்டுக்கு வந்திடுவில”

“வந்துடுவம்மா”

என்றுச் சொல்லி வேகமாக கிளம்புகிறான். ரெடியாகிவிட்டு, பர்ஸ்சில் இருக்கும் அந்த 1000ரூபாய் நோட்டை எடுத்து திருப்பிப் பார்க்கிறான், இருபுறத்திலும் முகவரி இருக்கிறது, ஒரு பக்கத்தில் மண்ணடி, பவலகாரத்தெரு பாரிமுனை, என்றும் மறு பக்கத்தில் தஞ்சை முகவரியும் இருக்கிறது, பாலா அதை பார்த்துவிட்டு மனதுக்குள்ளேயே

“தஞ்சைக்கு இப்ப போகமுடியாது. பீச் ஸ்டேசன் போய் கண்டுபிடிச்சி கொடுத்திட வேண்டியது தான்”

என்றுச் சொல்லியபடியே அம்மாவைக் கூப்பிட்டு “அம்மா போயிட்டு வரம்மா...” என்கிறான், அம்மாவும் “சரி போயிட்டு சீக்கரம் வா...” என்றகிறாள் இவனும் சரிம்மா.. என்று சொல்லிச் செல்கிறான் மக்கள் கூட்டம் அதிமாக இருக்கும் ரெங்கநாதன் தெருவின் வழியாக நடந்துக் கொண்டு அந்த நெருக்கடியை கடந்து மாம்பலம் ரெயில்வே ஸ்டேஷனுக்கு சென்று பீச் ஸ்டேஷனுக்கு டிக்கெட் எடுத்துக் கொள்கிறான்,
பிறகு ரெயிலில் செல்வதற்கு காத்திருக்கும் போது ஒருவர் முகத்தில் அதிகமான தாடியுடனும் மிகவும் ஏழ்மையான நிலையிலும் வந்து பாலாவிடம்

“தம்பி வணக்கம் நான் பாரிமுனைக்கு போகனும் காசு இல்ல கொஞ்சம் டிக்கெட் எடுக்க காசு தறிங்களா..”

என்றதும் பாலா அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு மனதுக்குள் “இவரிடம் காசு கொடுத்தா காசை வைத்துக்கொண்டு வேறு யாரிடமாவது காசு வாங்க ஆரம்பித்து, பிறகு பணம் சம்பாதிக்க தொடங்கிருவாரு” என்று யோசித்து அவனிடம் இருக்கும் டிக்கெட்டை அவரிடம் கொடுத்துவிட்டு இவன் மீண்டும் சென்று டிக்கெட் எடுத்து வந்து பார்க்கிறான், அவரைக் கானவில்லை மனதுக்குள்ளேயே

“சரி அவர் வேலை முடிந்தது போய்ட்டாரு”

என்றுச் சொல்லிக் கொண்டே ரெயிலில் ஏறிச் செல்கிறான், ரயில் ‘பூங்கா’ ஸ்டேஷனை கடந்து செல்கிறது அப்போது பாலாவிடமிருந்து காசு கேட்டு, டிக்கெட் வாங்கியவர் திடீரென வந்து நிற்கிறார். பாலாவைப் பார்த்து

“தம்பி எங்கபோறிங்க...” என்றதும் பாலா

“பீச் ஸ்டேஷன் போறங்க...’ என்கிறான் அவர் உடனே ‘பாரிமுனைக்கா... சரி வாங்க நானும் அங்கதானே போறேன்’ என்கிறார். உடனே பாலா அவர் சொன்ன பாரிமுனை வார்த்தையை வைத்துக் கொண்டு அவரிடம்

“ஏங்க... பாரிமுனையில பவலகாரதெரு எங்க இருக்குங்க” என்று கேட்டு விட அவர் முகம் சிறிது நேரம் கோபமாக பாலாவையே பார்த்துக்கொண்டிருக்க... பாலா பயந்த நிலையில் நிற்கிறான். அவர் சிறிது நேரத்தில் சிரித்துக்கொண்டே

“நம்ப பவலகாரதெருக்கா... வா நான் கூட்டிட்டு போறேன்.” என்கிறார்.

பாரிமுனை சென்று இறங்கியவுடன் ஒரு முறை அந்த 1000 நோட்டில் உள்ள முகவரியை பார்த்தப்படி, அப்படியே பாரிமுனையை ஒரு பெரிய பார்வையிடுகிறான். பார்வையிட்டப்படியே நிற்கிறான். அவர் அவன் பின்னே வந்து

“தம்பி என்ன அப்படியே பார்த்து நின்றுகொண்டு இருந்தா... வாங்க போகலாம்” என்று சொல்லி அவர் முன்னாடி நடந்து செல்ல பாலா அவரைப் பின் தொடர்ந்து செல்கிறான். சிறிது தூரம் அவரை பின்தொடர்ந்து சென்றுகொண்டு இருக்கிறான். அவர் திடீரென மக்கள் கூட்டத்தில் சென்று மறைந்து விடுகிறார். பாலா அவர் எங்கே போனார் என்று தேடிக்கொண்டே, அப்படியே அந்த தெருவைப் பார்க்கிறான், தள்ளுவண்டி, ரிக் ஷா, பெரிய மூட்டைகளை சுமந்துக்கொண்டும், சைக்கிள், பைக், கார், இவற்றுடன் மக்கள் கூட்டம் என வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் அந்த தெருவைப் பார்த்தபடி அப்படியே கடைகளின் போர்டை பார்க்கிறான். அதில் மண்ணடி என்று இருப்பதைப் பார்த்து வியந்துபோகிறான்.

அப்படியே வேகமாக நடந்து கொண்டு பவலகாரதெருவை விசாரித்துக்கொண்டு சென்றுகொண்டு இருக்கிறான், அப்போது ஒருவர் வீதியில் நடந்து வந்துகொண்டு இருக்கும் போது திடீரென நின்று கால் மிதியை கழட்டிவிட்டு மேலே பார்த்து கைநீட்டி வணங்குகிறான். பாலா என்ன என்று பார்க்கிறான். அது ‘காளிகாம்பாள்’ கோயிலின் கோபுரம் இவனும் வனங்கிக்கொண்டு மீண்டும் நடந்தபடி ஒரு தள்ளு வண்டிகாரரிடம்
“அண்ணா இந்த பவலகாரதெரு எங்கணா இருக்கு” என்றதும் அவர் சிறிது நேரம் யோசித்து

“நம்ப கோரல்மர்ச்சன் ஸ்ட்ரீட்டா... இதோ அந்த தெரு தான்”

என்று அந்த தெருவைக் காட்டிவிடுகிறார். அவன் அந்த தெருவைப் பார்த்தபடி நடக்க ஆரம்பிக்கிறான், அந்தத் தெருவில் இருக்கும் கிருஷ்ணகோயிலை கடந்து நடந்துகொண்டிருக்கிறான். அப்போது தெரு ஓரத்தில் ஒரு சிறிய வேப்ப மரம் ஒன்று இருக்கிறது, அதில்  வரையப்பட்ட ஓவியம் ஒன்று மாட்டிருக்கிறது, அதைப் பார்த்தபடியே பாலா அருகில் செல்கிறான். அதில் தஞ்சைபெரியகோயில் வரையப்பட்ட ஓவியம் இருக்கிறது. அதற்கு கீழ் 1010 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று எழுதியிருக்கிறது, அதை உற்று கவனிக்கிறான் அதில் உள்ள எழுத்தும் 1000 ரூபாய் நோட்டில் உள்ள முகவரி எழுத்தும் ஒன்றாக இருப்பதை உணர்கிறான். அந்த ஓவியத்தை நன்றாக பார்த்துக்கொண்டு இருக்கிறான்.  அதில் ஒரு ஓரத்தில் தஞ்சைகோயில் உருவம் போட்ட தங்கக்காசு பாதி வெட்டிய நிலையில் வரையப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்ததும் இவனுக்கு ஒன்று ஞாபகம் வருகிறது.

அவன் அம்மா, பாலாவின் அப்பா ஞாபகமா ரொம்ப வருடமாக வைத்திருக்கும் பாதியாக வெட்டப்பட்ட தங்ககாசு, அதில் இருக்கும் வருடமும் இந்த ஓவியத்தில் இருக்கும் பாதி தங்க காசின் வருடமும் பொருந்துகிறது, அதைப் பார்த்தவுடன் அதிர்ச்சியாகவும் ஒன்னும் புரியாமலும் திகைத்து நிற்க்கிறான். அப்போது அவன் ஃபோனுக்கு my wife என்ற பெயருடன் ‘மகா’விடமிருந்து கால் வருகிறது

“ஹலோ செல்லம் சொல்லு...”

“பப்பு எங்க இருக்க, அப்பாவும் அம்மாவும் மகாபலிபுரம் போயிருக்காங்க. நீ வந்தினா சீக்கரம் பார்க்கலாம்”

“மகா சீக்கரம் வறேன், இங்க எனக்கு ஒன்னும் புரியல”

“என்ன பப்பு சொல்ற... என்ன ஆச்சு...!”

“ஒன்னும் இல்ல இங்க உள்ள ஒரு ஓவியத்துல எங்க அம்மா பாதி தங்க காசு வைச்சிருக்காங்கனு சொன்னன்ல... அதோட இன்னோரு பாதி இங்கு வரையப்பட்டிருக்கு” என்றதும் மகா ஆச்சிரியமாக...!

“என்ன... உண்மையாவா”

“ஆமா செல்லம் அதத்தான் பாத்துகிட்டு இருக்கேன்”

“பப்பு நானும் அங்கு வரவா”

என்று பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு குடிகாரன் அவனையே நின்று உற்று பார்த்துக்கொண்டிருக்கிறான் திடீரென்று

“டேய் என்னடா நானும் பார்க்கிறேன் ரொம்ப நேரமா இந்த வேப்ப மரத்த பாத்தே பேசிகிட்டு இருக்க” என்றதும் பாலா ஃபோனில்

“செல்லம் நான் அப்பறம் பேசுறேன்” என்று போனை வைத்து விட்டு

“என்னங்க சும்மாதாங்க” என்றதும் குடிகாரன் நக்கலாக

“என்ன நொன்னாங்க... எதுக்கு இங்க நிக்கிற”

“இல்ல நான் ஒரு பெரியவர்... தாடியெல்லாம் வைச்சிகிட்டு... கையில ஒரு துணிப்பையோட இருப்பாரே...” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது அந்த குடிகாரன்

யாரு ராசாங்கமா... “எலவு வீட்டுக்கு வந்துட்டு இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க” என்றதும் பாலா அதிர்ச்சியாக

“என்ன சொல்றிங்க”

“அதோ பாரு மோளம் அடிக்கிற சத்தம் கேட்கல” என்றதும் பாலா தூரத்தில் மக்கள் கூட்டமாக இருப்பதையும் மோளம் சத்தத்தையும் கேட்டு அதிர்ச்சியோடு வேகமாக ஓடுகிறான், பாலா ஓடும் வேகத்தில் அந்த குடிகாரன் கீழே விழுகிறான். பாலா மின்னல் வேகத்தில் ஓடுகிறான், ஓடிச்சென்று மூச்சுவாங்கியபடி நிற்கிறான். ஒரு வீட்டின் முன் பெண்களும் ஆண்களும் நிறையபேர் நிற்கின்றனர். பெண்கள் நிறையபேர் வட்டமாக ஒருவரையொருவர் பிடித்தபடி அழுதுகொண்டிருக்கிறார்கள், ஒரு பக்கத்தில் சாவுக்கான இசையுடன் விசில் அடித்துக்கொண்டு நடனம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள், பாலா அனைத்தையும் பார்த்துக் கொண்டு மனதுக்குள்ளேயே...

“இறந்திருப்பது இந்த 1000ரூபாய் நோட்டு காதல் சின்னத்துக்குரியவராக இருக்கக்கூடாது” என்று சொல்லிக் கொண்டே அருகில் செல்கிறான். பெண்கள் அவனைப் பார்க்கவிடாமல் நிறையபேர் மறைத்துக்கொண்டு இருக்கிறார்கள். பாலா அதையும் தாண்டி பார்த்துவிட்டு

“அப்பாடி...” என்று பெருமூச்சு விட்டு முகத்தை மூடியபடி நிற்கிறான். சிறிது நேரம் சென்று அருகில் இருக்கும் கட்டையில் அமர்ந்திருக்கிறான், அப்போது அவன் ஃபோனுக்கு sms வரும் சத்தம் கேட்க, ஃபோனை எடுத்துப் பார்க்கிறான். my wife என்ற பெயருடன் sms வந்திருக்க அதை படித்துவிட்டு, கொஞ்சமாக அந்த அதிர்ச்சிலிருந்து விடுபடுகிறான். அப்போது ஒருவர் பின்புறமாக வந்து

“தம்பி...” என்று கூப்பிட பாலா ஃபோனைப் பார்த்தபடியே திரும்புகிறான்.


தொடரும்...




2 comments:

  1. idhu varai kadhai suvarasiyamaga poi kondirukirathu , yaar indha periyavar yaar pappuvin amma enna link endru mandai pichukirathu, eluthungal thodarnthu,

    ReplyDelete
  2. Kathirukkiren Avalodu.
    endrum anbudan

    ReplyDelete