Monday, October 4, 2010

"இரு திருமணம்" - தொடர்கதை பாகம் 2








பாகம் - 02

பேருந்து சிக்கனலை தாண்டி வேகமாக சென்றுவிட.. வருண் பழனியை கோபமாக

“வரமாட்டேனா கூப்பிட்டுக்கிட்டே இருக்க”

“வருண் வேலை ஆரம்பிச்சிடுவாங்கடா”

“சரி... சரி... வாடா போகலாம்”

என்று வருண் சொன்னதும் இருவரும் திருமணமண்டபத்துக்கு நடந்து செல்கிறார்கள், காற்றில் பேருந்து மற்றும் பல வாகனத்திலிருந்து வரும் புகை காற்றில் கலந்து வீசியபடி அவர்களை கடந்து செல்கிறது.

ரோட்டில் படர்ந்து கிடக்கும் மண் வாகனம் போகும் வேகத்தால் பறந்துக் கொண்டிருக்க பைக்கில் போகுவோர் மற்றும் நடந்து செல்வோர் கையை முகத்தில் வைத்து மறைத்தப்படியே செல்கிறார்கள்.

திருமணமண்டபம் வந்தடைகிறார்கள், மண்டபத்தின் வாசலில் அக்கரகார பெண்கள் மடிசார் கட்டிக் கொண்டு நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

“அண்ணா அவா வந்துட்டாளா ஆத்திலிருந்து வர கொஞ்சம்  நாழியாயிடுது”

என்று பேசிக்கொண்டு பலர் உள்ளே நடந்துக் கொண்டு இருக்க திருமணமண்டபம் அருகில் வருகிறார்கள் உடனே வருண்

“பழனி... ஐய்யர் வீட்டு கல்யாணம் போலருக்கு”

“ஆமாண்டா வாடா”

“டேய் பழனி அப்போ நிறைய பொண்ணுங்க வருவாங்க?”

“அப்போ வேற கல்யாணமா இருந்தாப் பெண்கள் வர மாட்டாங்களா”

“ அப்படி இல்ல...”

“வருண் ஏன்டா இப்படி, நம்ம வேலைக்கு வந்திருக்கோம் பேசாம வாடா”

என்று பழனி சொன்னவுடன் வருண் மவுனமாகிறான். இருவரும் மண்டபத்துக்குள் செல்கிறார்கள், நிறைய சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். மண்டபத்தின் வாசலில் ஒரு பெரிய ஊஞலை பூவால் அலங்காரம் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.


வருண் ‘பூ,’  அழங்காரத்தை பார்த்தபடியே

“அப்பா எவ்வளவு ‘பூ,’ பார்ப்பதற்க்கே ரொம்ப அழகா இருக்குடா”

“வருண் அதை எல்லாம் அப்பரம் பாத்துக்கலாம் சீக்கரம் வாடா”

“சரி... சரி... வாடா போகலாம்”

பேசிக்கொண்டே மண்டபத்துக்கு பின்பக்கம் இருக்கும் படி வழியாக மேலே ஏறுகிறார்கள்.

“பழனி ஏன்டா அந்த பக்கமா கூட்டிட்டுப் போகாம பின்பக்கமா கூட்டிட்டு போற”

“வருண் வேலைக்கு போரம் இந்த பக்கமாதான்டா போகனும்”

“வேலை செய்யும் போதாவது உள்ள போய் பார்க்கலாமா”

“பாக்கலாம்டா ஆனா கையில் ‘காபி’ தட்டுடன்”

“பழனி என்னடா...”

“சரி சரி நான் பாத்துக்குறேன் வாடா”

என்று பேசிக்கொண்டே போக அங்கே ‘வேல்’ என்பவர் போனில் பேசிக்கொண்டே வேளியே வருகிறார்.

“வடபழனி தான்டா ராஜேந்திரன் மாமாவோட அந்த பசங்க ஆறு பேரையும் கூட்டிட்டு வாடா”

என்று பேசிக்கொண்டே இவர்களைப் பார்க்க பழனி

“வணக்கம் அண்ணா”

என்றதும் அவர் போனை பேசி முடித்து, அவர்களைப் பார்த்து

“என்ன பழனி எப்படி இருக்க.. பையன் யாரு”

“அண்ணா என் பிரண்ட்ண்ணா வேலைக்கு கூட்டிட்டு வந்தேன்ணா”

“அப்படியா! ஏற்கனவே வேலை பார்த்திருக்கான”

“இல்லணா காலேஜ் படிச்சிகிட்டு இருக்கான்ணா”

“சரி உள்ள கூட்டிட்டு வா”

என்று சொல்லிவிட்டு அவர் முன்னாடிச் செல்ல இவர்கள் அவரைப் பின் தொடர்ந்து செல்கிறார்கள், ‘வேல்’ ஒரு அட்டைப் பெட்டியிலிருந்து வெள்ளை கலர் சட்டையும், கருப்பு கலர் பேண்டும் எடுத்து

“பழனி இந்தா சீக்கரம் போட்டு கூட்டிட்டு வா” என்று கொடுத்துவிட்டு மீண்டும் போனில் பேசிக் கொண்டே

“ஹலோ சொல்லு, ஆமா 50 லிட்டர் பால்தான் கொண்டு வந்திடுங்க”

பேசிக்கொண்டே வேல் சென்றுவிட  பழனி கையில் இருக்கும் ஆடையை உதறிக்கொண்டே

“வருண் வாடா போய் போட்டிட்டு வந்திடுவோம்”

“என்னடா இத போய்... போட சொல்ற”

“வேலை முடியும் வரைக்கும் இததாண்டா போடனும்”

என்றதும் வருண் அந்த ஆடையை வாங்கி சிறிது நேரம் யோசித்து தலையைச் சொரிந்த படியே

“சரி வாடா போட்டுக் கொண்டு வருவோம்”

என்று பின் பக்கம் சென்று ஆடையை மாற்றிக் கொண்டு இருக்க அந்த பக்கம் வேலைக்கு வந்த பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், வருண்  ஆடையை மாற்றிக் கொள்ள மறுக்கிறான்.

“பழனி அங்க பாருடா பொண்ணுங்க இருக்காங்கடா”

“டேய் அவங்க இருந்தா என்ன நீ பேண்ட்ட மாத்துடா”

என்றதும் தயங்கியபடி மாற்றிக் கொண்டு வருகிறார்கள், வருண் மட்டும் பேண்டிடம் சண்டை போட்டுக் கொண்டு வருகிறான்.

“பழனி பேண்டுல ஜிப்பு இல்லடா”

“சரி இங்கேயே இரு நான் போய் வேற எடுத்திட்டு வரறேனு”

உள்ளேச் சென்று வேற ஆடையை எடுத்து வந்து தந்தவுடன் வருண் பேண்டை மாற்றிக் கொண்டு இருவரும் உள்ளே செல்கிறார்கள். அங்கே வேல் சிலருக்கு வேலை சொல்லி கொடுத்துக் கொண்டு இருக்கிறார். இவர்களை பார்த்தவுடன்

“பழனி நீ ‘டிபன்’ எல்லாம் ரெடியானு பாத்து, எல்லாத்தையும் மேலே எடுத்திட்டு வந்திடு பசங்க அங்க இருப்பாங்க”

“சரிண்ணா”

என்று சொல்லி சென்று விட ‘வேல்’ வருணிடம்

“தம்பி நீ எந்த வேலை செய்வ”

“எந்த வேலை கொடுத்தாலும் செய்வேண்ணா”

“அப்படியா சரி வா...”

அழைத்து செல்கிறார். அங்கே ஏற்கனவே நிறையப் பேர் பல வேலைகளைச் செய்துக் கொண்டு இருக்கிறார்கள், அதில் ஒதுக்குபுறமாக ஒரு ஓரத்தில் பெரிய அண்டாவில் சூடாக இருக்கும் பூந்தியில் சர்க்கரை பாவு (ஜிரா), முந்திரி,திராட்சை,பாதாம் என போட்டு கலந்து பெரிய பெரிய லட்டாக  பிடிதுக் கொண்டிருக்கிறார்கள்.

அவ்வளவு லட்டையும் பார்த்தவுடன் வருண் வாய்யடைத்து நின்றபடி

“அப்பாடி எவ்வளவு லட்டு” என்று வாய்குள்ளயேச் சொல்ல

“தம்பி இவர்களோடச் சேர்ந்து லட்டை பிடி” என்றதும்

“சரிண்ணா” என்று ஆசையாக அமர்கிறான்.

வேல் வருணை பார்த்தத

“இப்ப இந்த வேலையைச் செய், நான் அப்பரமா வேற வேலை தரறேன்”

“ok அண்ணா”

என்றதும் அவர் மற்ற பசங்களை வேலை வாங்க செல்கிறார், வருண் லட்டை உருண்டை பிடித்துக் கொண்டிருக்கும் அனைவரையும் பார்க்கிறான், அவர்கள் கையில் ‘க்ளவுஸ்’ தலையில் ‘தொப்பி’ என அணிந்திருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க அதில் பெரியவர் மட்டும்

“என்ன முழிச்சி பாத்துக்கிட்டு இருக்க இந்தா இதை கையிலும் தலையிலும் போட்டுகிட்டு ஒக்காரு”

“இத போடனுமா”

“ஆமா நீ படிச்சவதானே”

“அதுக்கு”

“கை சுத்தமா இருக்காது, தலை முடி கொட்டும்னு தெரியாது”

என்றதும் வருண் வேகமாகப் போட்டுக் கொண்டு லட்டை பிடிக்க ஆரம்பிக்கிறான், லட்டு கையில் உருண்டை ஆகாமல் கொட்டிக் கொண்டு இருக்கிறது அதை பார்த்த பெரியவர்

“இந்தா... தம்பி இங்க பாரு இரண்டு கையிலும் நல்லா அல்லி பெரிய, பெரிய லட்டாக பிடி சீக்கரம் 1000 லட்டு பிடிக்கனும்”

“ஆயிரம் லட்டா....!”

என்ற ஆச்சிரியத்துடன் லட்டு பிடிக்கிறான். லட்டு பிடிக்க முடியவில்லை. சர்க்கரை பாவு கையில் பட்டு கை சூடாக இருக்கிறது. மிகவும் சிரமப்பட்டு ஒரு லட்டு பிடிக்கிறான். அதை ஒரு பாத்திரத்தில் வைக்கிறான் அது சிறிது நேரம் கழித்து உடைந்து விடுகிறது. உடனே

“அய்யோ என்ன இது”

“தம்பி நிதானமா பொருமையா பிடி... போக போக வந்திடும்”

“சரிங்க”

வருண் மனதுக்குள்ளேயே

“இது வரை ‘லட்டை’ கடையில் தான் பணம் கொடுத்து வாங்கி சாப்பிட்டிருக்கேன்”

“இப்பதான் தெரிகிறது லட்டுக்கு பின்னாடி இவ்வளவு சிரமமான வேலை இருப்பது”

என்று மனதுக்குள்ளேயே பேசிக்கொண்டு தூள் பூந்தியை உருண்டையாக்கி லட்டாக மாற்றிக்கொண்டிருக்கிறான், வருண் வேலை செய்துக் கொண்டிருப்பதை பெரியவர் மௌனமாகப்  பார்த்து மனதுகுள்ளேயே

“பாவம் சின்ன பையன் படிச்சிக்கிட்டு இருப்பான்னு நினைக்கிறேன்”

“தம்பி உங்க பெயர் என்னப்பா”

“வருண்-ங்க... உங்க பெயர்ங்க”

“என் பெயரா... முத்தழகுப்பா”

“அப்படியா...”

“சரி நீ என்ன படிக்கிற”

“Bsc. Computer Science”

“ஓ... அப்படியா...! என் மகனும் அதை தான் படிச்சி முடிச்சிட்டு, அதுக்கு மேல படிக்கிறான்”

என்றதும் வருண் அதிர்ச்சியாக வாயை மூடியபடி

“அப்படிங்களா...!”

பேசிக்கொண்டிருக்க ‘வேல்’ அவர்கள் அருகில் வந்து வருணைப் பார்த்து

“தம்பி உன்னதான் இங்க வா”

“என்னையா”

“ஆமா இங்க வா”
வருண்னுடன் மற்றோரு பையனையும் கூப்பிட்டு

“தட்டில் இலை போடனும் நீங்க இரண்டு பேரும் கீழே போய் ஸ்டோர்ல இலையை வட்டமா வெட்டிக் கொண்டு இருப்பாங்க, போய் வாங்கிட்டு வாங்க”

“சரிங்கண்ணா”

ஸ்டோர் இருக்கும் அறைக்கு நடந்து செல்கிறார்கள். வழியில் சிலர் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருக்க, அதில் அதிகமானோர் வயதானோர் தான், அதில் ஒருவரை உற்று கவனிக்கிறான், அவர் பார்ப்பதற்க்கு மெலிந்தும் கை, கால்களில் நரம்புகள் பின்னிக் கொண்டு தெரிகிறது.

அதை பார்த்துக் கொண்டே நடந்து சமையல் அறைவழியாகச் செல்கிறார்கள், அங்கே பலவகையான உணவை பெரிய, பெரிய பாத்திரத்தில் சமைத்துக் கொண்டிருக்கிறார்கள், வாசனை மூக்கைத் துளைக்கிறது.

அங்கே சாம்பார் வைத்து முடித்தவர்,

“டேய்... தம்பிங்களா இங்க வாங்க, இதக் கொஞ்சம் இறக்கி வைச்சிட்டுப் போங்க”

“நாங்க இலை வாங்க வந்தோம்”

“சரி...  நான் இல்லன்னா சொன்ன..  இதக் கொஞ்சம் இறக்கி வைச்சிட்டு போறது”

என்றதும் அவருடன் சேர்ந்து இறக்கி வைக்கிறார்கள். வருணுக்கு லேசாக கை சுட்டுவிடுகிறது, கையை உதறியபடி மீண்டும் நடந்து சென்று

“அண்ணா இலை கொடுங்க”

“எவ்வளவு”

“எவ்வளவுன்னு தெரியல வாங்கிட்டு வரச் சொன்னாங்க”

“சரி இரண்டு கட்டு எடுத்துட்டுப் போங்க”

வருணும் மற்றொரு பையனும் கையில் ஆளுக்கு ஒரு கட்டாக எடுத்து வந்து வேலிடம் கொடுக்கிறார்கள்.

வேல் ‘டிஷ்யு பேப்பர்’ பண்டலை எடுத்து அதில் ஒன்றை முக்கோணமாக மடித்து, தட்டில் இலைப் போட்டு அதில் இந்த முக்கோணமாக இருக்கும் பேப்பரை வைத்து அவர்களிடம்

“தம்பிங்களா இது மாதிரி எல்லா தட்டிலும் வைங்க”

“சரிங்கண்ணா”னு சொல்லி

எல்லா தட்டிலும் இலை போட்டு, முக்கோணமாக பேப்பரை மடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வுருணை மட்டும் யாரோ ஒரு பெண் வேலையை பார்த்தப்படியே மறைந்துக் கொண்டு வருணை பார்ப்பதை வருண் கவனிக்கிறான், அப்போது வேல் திடீரென கையில் இருக்கும் வாட்சில் நேரத்தை பார்துவிட்டு வேகமாக வந்து

“எல்லாரும் இங்க பாருங்க எல்லாரும் செய்யும் வேலையை நிறுத்திவிட்டுச் சீக்கரம் வாங்க”

எல்லோரும் கலைந்து பேசிக்கொண்டே வருகிறார்கள். மீண்டும் வேல் வேகமாக
“பாதி பேர் இவர்களோடு தட்டில் இலை போடுங்க, பாதி பேர் என்கூட வாங்க” என்று அழைத்துச் செல்கிறார்.

வேலைகள் வேகமாக நடக்கிறது. அனைவரும் பெரிய பாத்திரத்தில் இருக்கும் சாம்பார், பொங்கள் என பலவற்றை சிரிய பாத்திரத்தில் எடுத்து டேபுலில் வைக்கிறார்கள். அவர்கள் வைத்த பாத்திரத்துக்கு அருகில் ஒரு அட்டையில் உணவின் பெயரை எழுதி சப்பாத்தி, பன்னீர் பட்டர்மசாலா, ரவாஇட்லி, சாம்பார் என பல உணவின் பெயர் எழுதி வைக்கிறார் ஒருவர்.

அனைவரும் தலையில் தொப்பியும், கையில் க்ளவுஸ் அணிந்தும் ஒவ்வோரு உணவுகிட்டையும் கரண்டியால் உணவை கிளறி விட்டபடி நிற்க்கிறார்கள்.

வேல் வேகமாக வந்து

“நான் சொல்றத நல்லா கேளுங்க, யாரும் கோபப் படாமல் பாத்து பொருமையா பரிமாருங்க”

“சரியா”

“சரிங்க”

அனைவரும் வந்து சாப்பிட ஆரம்பிக்கிறார்கள் உணவு உபசரிப்பு ஒரு மணி நேரத்துக்கு மேல் நடக்கிறது.

வருண்னுக்கு பசி தாங்க முடியவில்லை, அங்கே வரும் அனைவரும் வசதியானவர்கள், பெண்கள் அழகாக புடவை அணிந்து ஆடம்பரமாக வந்திருப்பதை பார்த்து தலை குனிந்து வேலை பார்க்கிறான்.

ஒருவழியாக அனைவரும் சாப்பிட்டு முடிக்கிறார்கள், சிறிது நேரம் கழித்து வேல் யாராவது வருகிறார்களா என்று பார்த்து கொஞ்சம் நேர்ம் கழிந்து

“சரி எல்லாரும் சீக்கரம் சாப்பிடுங்க மதிய உணவு வேலை ஆரம்பிக்கனும்”

என்றதும் அனைவரும் கலைந்து செல்கிறார்கள், பழனி வருணிடம் வருகிறான்.

“வருண் வா கையை கழுவிட்டு சாப்பிடலாம்”

“டேய் பழனி நான் இவ்வளவு லேட்டா சாப்பிட்டதே இல்லடா”

“விடுடா வேலைக்கு வந்தா கொஞ்சம் அப்படி,இப்படினு தான் இருக்கும்”

“டேய் என்னால பசியோட வேலை பார்க்க முடியாது”

“என்னடா சொல்ற...”

“ஆமடா என்னால வேலை பார்க்க முடியாது”

“டேய் என்னடா இப்பபோய் சொல்ற சொல்லி தானே கூட்டிட்டு வந்தேன்     நீ தான் பாத்துக்கலாம்னு வந்த”

“சொன்னதாண்டா!.. ஆனா இவ்வளவு கஷ்டமா இருக்கும்னு நினைக்கள”

“கொஞ்சம் கஷ்டமாதாண்டா இருக்கும் பொருத்துக்க”

“பழனி வேணாண்டா வேலை பாத்த வரைக்கும் பணம் வாங்கிக் கொடு நான் போறேன்.”

“டேய் பாதிலயே வேலை செய்யாம போனா ‘வேல்’அண்ணா பணம் கொடுக்கமாட்டாருடா”

என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ‘வேல்’ வேகமாக நடந்து வந்தப்படியே...

“பழனி... அங்க என்ன நின்னு பேச்க்கிட்டு இருக்க... சீக்கரம் வா...பாத்திரத்தை எல்லாத்தையும் கீழ தூக்கு”

என்று சொல்லியபடியே அருகில் வருகிறார்.

தொடரும்...

11 comments:

  1. விறுவிறுப்பாக செல்கிறது தொடருங்கள்

    ReplyDelete
  2. கதையை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அருமை கமல்...! கண்டிப்பாக ஒரு நல்ல எழுத்தாளனை எதிர்ப்பார்க்கிறேன்..!

    -
    DREAMER

    ReplyDelete
  3. அருமை நண்பரே தொடருங்கள்

    ReplyDelete
  4. ஆர்வத்தை தூண்டும் விதமா எழுதறீங்க...அடுத்த பாகத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்..

    ReplyDelete
  5. நன்றி டாக்கடர் தொட்ர்ந்து எழுதுகிறேன்

    ReplyDelete
  6. நன்றி பிரியமுடன் ரமேஷ் அவர்களே தொடர்ந்து எழுதுகிறேன். தொட்ரந்து படியுங்கள்

    ReplyDelete
  7. DREAMER அவர்களே...

    நன்றி சார் கண்டிப்பாக ஒரு நல்ல எழுத்தாளனாக தொடர்ந்து எழுதுகிறேன்.

    தொடர்ந்து படியுங்கள் நன்றி

    ReplyDelete
  8. ரசிச்சு படிக்கும் படியாக எழுதியிருக்கீங்க கமல்.. வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்க..

    ReplyDelete
  9. நன்றி பதிவுலகில் பாபு அவர்களே... தொடர்ந்து எழுதுகிறேன்...

    ReplyDelete
  10. அருமை நண்பரே

    ReplyDelete