Monday, October 11, 2010

"இரு திருமணம்" - தொடர்கதை பாகம் 3

     வேல் வேகமாக இவர்கள் இருவர்களையும் நோக்கி வர இருவரும் ஒருவருக்கொருவர் முலித்து பார்த்துக் கொண்டுடிருக்கிறார்கள். வேல் இருவரின் அருகில் வந்து,

“என்ன பழனி அங்க வேல எவ்வளவு இருக்கு பொருப்பு இல்லாம இங்க நின்னு பேசிக்கிட்டு இருக்க”

“ஒன்னும் இல்லணா சும்மாதாணா”

“சரி... சரி... கூப்பிட்டுட்டு போ சீக்கரம்” என்றதும் பழனி மெதுவாக

“டேய் வருண் வாடா”

என்று பழனி வருணை கூப்பிட்டு கொண்டிருக்க அவன் வேல்லை கோபமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவர் வழக்கம் போல் எல்லாரிடமும் வேலைச் சொல்லிக் கொண்டும், அவனை பார்க்காமல் இருக்கிறார், பழனி மெதுவாக வருண் கையை பிடித்து இழுத்த வாறே,

“வாடா வருண்” அவன் வறாமல் பார்த்தபடியே இருக்கிறான்.

“வாடா...” என்று மீண்டும் கூப்பிடுகிறான்.

பழனி மெதுவாக வருணை அழைத்துக் கொண்டு இருவரும் வருகிறார்கள், அங்கே நிறைய பேர் அங்கே இருக்கும் பாத்திரத்தை இறக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஒரு பெரியவர்க்கு உதவியாக ஒரு பெண் பாத்திரத்தை தூக்கிச் செல்கிறாள். அந்த பெண் வருணை மறைந்து, மறைந்துப் பார்க்கிறாள்.அந்த பெண் பார்ப்பதை வருண் பார்த்துவிடுகிறான், அந்த பெண் உடனே பாத்திரத்தில் முகத்தை மறைத்தப்படியே செல்கிறாள். அப்போது பழனி

“டேய் வருண் வாடா இத தூக்கு இறக்குவோமடா”

“டேய் என்னடா இவ்வளவு பெரிய பாத்திரத்தை தூக்கச் சொல்ற”

“டேய் லேசாதாண்டா இருக்கு தூக்குடா”

என்று சொல்ல இருவரும் சேர்ந்து தூக்கி கீழே இறக்குகிறார்கள். அப்போது பாத்திரம் தேய்க்கும் இடத்தில் நிறையப் பேர் பாத்திரத்தை வேக, வேகமாக தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா பைப்புகளிலும் தண்ணீர் வேகமாக ஊற்றிக் கொண்டுடிருக்கிறது, பாத்திரத்தில் தண்ணீர் நிறைய்துக் கொண்டு இருக்கிறது.

வருணும், பழனியும் பாத்திரத்தை தூக்கி வருகிறார்கள், அப்போது பாத்திரம் தேய்க்கும் ஒரு பெரியவர் பக்கத்தில் நின்று அதே பெண், உதவிச் செய்துக்கொண்டு இருக்கிறது. அந்த பெண் வருண் வருவதை பார்த்துக் கொண்டு இருக்கிறது. வருண்ணும் பார்த்துக் கொண்டே வருகிறான். அப்போது அந்த பெரியவர்

“தம்பி பழனி பக்கத்துல தூக்கிட்டுவா எல்லாரும் தூரமாகவே வைத்திட்டு பேயிடுறாங்க தம்பி”

“சரிங்க...ஐயா”

என்று அருகில் பாத்திரத்தை வைக்கிறார்கள். அந்த பெரியவர் மீண்டும்,

“பழனி மேல பாத்திரம் எல்லாத்தையும் இறக்கியாச்சா”

“இன்னும் கொஞ்சம் இருக்கம்”

“அப்படியா... சரி எல்லாத்தையும் இறக்கிடுங்க”

என்று இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது, அந்த பெண்ணும், வருண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டுடிருக்கிறார்கள். அப்போது வருண் அந்த பெண்ணின் கையைப் பார்க்கிறான், கையில் சோப்பு நுறையும் பாத்திரம் கழுவி ஓடும் தண்ணீர், தக்காளி,வெங்காயம்,பருப்பு என சோப்பு நுறை கலந்து ஓடும் தண்ணீரில் நின்றுக் கொண்டிருப்பதை பார்த்து முகத்தை திருப்பிக் கொள்கிறான்.

அப்போது சமயல் அறையிலிருந்து ஒரு சமயல்காரர் வேளியே வந்து பழனியை பார்த்தவுடன்,

“பழனி ‘வேல்’ அண்ணா எங்க”

“அவரு மேல இருந்தாறே”

“அப்படியா இன்னும் 50 தேங்கா வேணும்”

என்று பேசிக்கொண்டு இருக்கும் போது வேல், பின்பக்கமாக வந்து கோபமாக

“தேங்கா இல்லனா என்ன தான் தேடுவியா”

“இல்லண்ணா...”

“என்ன நொல்லணா...யாராவது இரண்டு பசங்களை கூப்பிட்டு தேங்காவ உடைத்து துருவ சொல்ல வேண்டியது தானே” என்று சொல்லி பழனியை பார்த்து

“டேய் பழனி”

“சொல்லுங்கண்ணா”

“அந்த பையனை கூட்டிட்டு அந்த தேங்காவ உடைத்து துருவி கொடுடா”

என்றதும் பழனி “வருண் வாடா” என்று கூப்பிட்டு அழைத்துச் செல்கிறான், அங்கு தேங்காய் மூட்டையிலிருந்து, 50 தேங்காயை என்னி எடுத்துக் கொண்டு உடைக்க ஆரம்பிக்கிறார்கள், பழனி  கட்டையில் தேங்காவை வேக வேகமாக உடைத்துக் கொண்டிருக்க, வருண் மெதுவாக ஒரு தேங்காவை பல முறை கட்டையில் அடித்துக் வட்டமாக உடைக்காமல் தூள்லாக உடைத்து விடுகிறான். அதை பார்த்த பழனி

“டேய் வருண் பொருமையா தேங்கா நடு வரும்புல படும் படி கட்டையில அடி, வட்டமாக உடையும்” என்றதும் வருண்

“அப்படியா...”

என்று உடைக்க ஆரம்பிக்கிறான், அருகில் பக்கத்து அறையில் நிறைய பேர் கையில் கத்தியை வைத்துக் கொண்டு வேகமாக காய்கறியை வெட்டிக் கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் வெட்டுவதிலிருந்து சத்தம் வெளியே வருகிறது, அந்த சத்தத்தை வருண் தேங்காய் உடைத்து மறைத்துக் கொண்டிருக்கிறான்.

அப்போது காய்கறி வெட்டும் ஒருவர் ஒரு சிறியப் பாத்திரத்தை எடுத்துக் வந்து வருணை பார்த்து

“டேய் தம்பி இந்த பாத்திரத்தில தேங்கா தண்ணியை புடி”

என்கிறார் அதை பார்த்த பழனி அவனிடம்

“சோமு தேங்காவ சீக்கரம் உடைச்சி துருவுனுண்டா”

“நா... என்ன தேங்காவ உடைக்க வேனானா சொன்ன”

“ அதுக்கு இல்லடா...”

“தம்பி நீ அந்த பாத்திரத்துல புடி” என்றதும் வருண் கோபமாக

“சரி... சரி..”

என்று உடைக்கிறான், ஒரு தேங்காயயை உடைத்து தண்ணியை படித்துவிட்டு மறு தேங்காயை உடைக்கிறான், அப்போது வருணின் விரல் சதை தேங்காவில் மாட்டி விடுகிறது.

“அம்மா...”   “அய்யோ...”   டேய் பழனி வாடா

என்று கத்தவும் பழனி ஓடிச் சென்று விரலை தேங்காவிலிருந்து எடுத்து வடுகிறான்.
“பழனி மெதுவா... பாத்துடா”

பழனி கோபமாக

“டேய் பாத்து உடைக்க மாட்ட”

என்று கோபப்பட்டு திட்டவும் வருண் விரலை பிடித்தப்படி கீழே அமர்ந்து விடுகிறான். பழனி உடனே

“சரி நீ ஒக்காரு நான் பாத்துக்கிறேன்”

என்று சொல்லி அனைத்து தேங்காய்யும் வேகமாக உடைத்துக் கொண்டுடிருக்கிறான். அப்போது தேங்கா தண்ணீர் கேட்டவர் வேகமாக வெளியே வந்து, அந்த பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு

“தம்பி ரொம்ப வலிக்குதா”

என்று சொல்லிக் கொண்டே பழனி தேங்காயை உடைக்க இவர் தண்ணீரை பிடித்துக் கொள்கிறார். அதை வருண் பார்த்து

“ச்ச... ”என்று பல்லை கடித்துக் கொள்கிறான்.


பழனி அனைத்து தேங்காவையும் உடைத்து முடித்து விட்டு உடைந்த தேங்காய் மூடியை அனைத்தையும் ஒரு கூடையில் அள்ளிக் கொண்டு

“வருண் வாடா”

என்று மாவு அறைத்துக் கொண்டிருக்கும் அறைக்குள் அழைத்துச் செல்கிறான். அங்கே இரண்டு ‘கிரேண்டர்’ ஓடிக்கொண்டிருக்கிறது, அதற்க்கு கீழே தேங்காய் துருவுவது ‘கிரேண்டர்’ ஓடும் வேகத்துக்கு சுத்திக் கொண்டிருக்கிறது, அதை பார்த்தவுடன் வருண் விரலை வாயில் வைத்தப்படியே

“இங்க எதுக்குடா கூட்டிட்டு வந்த”

“இங்க தாண்டா தேங்கா துருவனும்”

“டேய் என்னால முடியாது”

“டேய் உன்ன யாருடா செய்ய சொன்னது நீ பேசாம ஒக்காரு”

“டேய் நான் அதுக்குனு சொல்லலடா”

“வேற எதுக்கு... ”
“இல்ல நான் போறண்டா”

“டேய் என்னடா நீ”

என்றதும் வருண் விரலை பார்த்து மீண்டும் வாயில் வைத்தபடி

“டேய் என்னால இவ்வளவு கஷ்டப்பட்டு வேலைச் செய்ய முடியாது”

என்று பேசிக் கொண்டிருக்கும் போது சமயல்காரர் வேகமாக வந்து

“பழனி தேங்கா எல்லா துருவியாச்சா”

“இதோ துருவிக்கிட்டு இருக்கண்ணா”

“சீக்கரம் பழனி”

“முடிஞ்சிருச்சிண்ணா” என்றதும் அவர் போக மீண்டும் வருண்

“பழனி நான் கிளம்புறேன்”

“டேய் நீ இப்ப போனினா உன் விரல் அடிப்பட்டதுக்கு கூட புரோஜனம் இல்லாம போயிடும்டா”

“என்ன சொல்ற”

“இவ்வளவு நேரம் இருந்திட்ட இன்னும் கொஞ்சம் நேரம், மதிய சாப்பாடு முடியும் வரைக்கும்”

“அப்போ இன்னும் வேலை செய்ய சொல்ற”

“இல்லடா மதிய சாப்பாடு முடிச்ச உடனே போய்டு நான் பணம் வாங்கிட்டு வந்திடுறேன்”

என்று சொல்லி பழனி வேகமாக தேங்காய் மூடியை எடுத்து, வேகமாக சுத்திக் கொண்டிருக்கும் தேங்கா துருவதில் தேங்காய் மூடியை அழுத்தி பிடிக்கிறான், தேங்காய் ‘பூ’ போல் தூளாக கீழே கொட்டுகிறது.

அனைத்து தேங்காய் மூடியையும் துருவிட்டு தேங்காய் ‘பூ’ எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு சமயல் அறைக்கு இருவரும் எடுத்து வருகிறார்கள், அங்கே இருக்கும் சமைப்பவர்ரிடம் கொடுக்கிறார்கள்.

“அண்ணா இந்தா எல்லாத்தையும் துருவியாச்சி”

“கொடு பழனி சீக்கரம்”
என்று வாங்கி அவர் வேலையை வேகமாக செய்கிறார், அப்போது ‘வேல்’ வேகமாக பேசிக் கொண்டே சமயல் அறைக்குள் நுழைகிறார்.

“நேரமாச்சி எல்லாம் ரெடியாயிருச்சா”

“ரெடியாகிட்டே இருக்கு” என்றால் சமைப்பவர் ஒருவர்

“ரெடியாகிட்டே இருக்கா எப்போ... சீக்கரம்”

என்றதும் மற்றோருவர், கோபமாக

“பாதி ரெடியாகி முடிஞ்சிரிச்சி இன்னும் பாதி அடுப்புல முடிக்கிற கட்டத்துல இருக்கு”

என்றதும் வேல் கோபமாக பழனி பார்த்து

“பழனி ரெடியானது எல்லாத்தையும் மேல தூக்கு”

“தூக்குண்ணா நீங்க போய் பசங்கள வரச்சொல்லு” என்றதும் அவர் கோபமாக

“நான் வரச்சொல்றண்டா நீ சீக்கரம் அந்த பையன வச்சிக்கிட்டு தூக்கிட்டு வா”

என்றுச் சொல்லி வேல் மேலே செல்ல, வருணும் பழனியும் ‘ரசம்’ இருக்கும் பெரிய அண்டாவை தூக்கிறார்கள், அப்போது வருண் தூக்கமுயாமல்

“டேய் தூக்க முடியலடா”

“நல்லா தம்புடிச்சி தூக்குடா”

என்றதும் வருண் தூக்குகிறான் பழனியும் தூக்கி வருகிறான், அப்போது அந்த பெரியோருடன் இருக்கும் பெண் வருணையே பார்க்கிறாள் ஆனால் அதை பார்த்த வருண் முகத்தை திருப்பிக் கொண்டு வேறப்பக்கம் பார்த்துப் படியே தூக்கி செல்கிறான் சிறிது தூரம் சென்ற பிறகு தூக்க முடியாமல் பொத்தென்று கிழே வைத்துவிடுகிறான் அப்போது அண்டாவில்லிருந்த ‘ரசம்’ தலம்பி பழனி கையில் பட்டுவிட உடனே வருண்

“என்னால முடியலடா என்ன விடுடா நான் போறேன்”

என்றுதும் பழனி கையை உதறியப்படி கோபமாக

“என்னடா போற, போறனு போறதா இருந்த போடா”

என்றதும் வருண் அதிர்ச்சியாகி , சோகத்துடன் முகத்தை சுழித்துக் கொண்டு தலையை குனிந்து, யோசித்து சிறுது நேர்ம் கழித்து

“டேய் பழனி சரி.... விடுடா தூக்குடா”

என்றதும் பழனி மௌனமாக கையை உதறிப்படி குனிந்து தூக்கிறான் இருவரும் சேர்ந்து தூக்கிச் செல்கிறார்கள். அப்போது மேலே வேல் கல்யாணகார் ஒரு ஐய்யரிடம் பேசிக் கொண்டிருக்கிறார், பழனியும், வருணும் ரசத்தை தூக்கி வருவதை வேல் பேசிப்படியே பார்க்கிறார், இருவரும் ரச அண்டாவை வைத்துவிட்டு வேற தூக்குவதற்க்கு கீழே மீண்டும்  செல்கிறார்கள் அப்போது வேல்

“பழனி நில்லு அந்த பையன் பேரு என்ன”

“வருண்ணா...” என்றதும் வருண்

“ஆமாங்க வருண் ...” என்றதும் வேல்

“இங்க வா இவரோட போய் கீழ ‘லட்டு’ கூடையை தூக்கிட்டுப் போ பொண்ணு வீட்டுகாரவங்களுக்கு ‘லட்டு’ கொடுக்குனுமா”

என்றதும் வருண் முகம் கோபத்தில் கடுப்பில் இருந்தது, திடீரென மகிழ்ச்சி

“சரிங்கண்ணா...”

என்றுச் சொல்லி முகத்தை துடைத்துக் கொண்டும், தலையை நன்றாக வாரிக்கொண்டும், சட்டை சரியாக இருக்கிறதா என்று இழுத்துப் பார்த்துக் கொண்டு வேகமாக செல்கிறான்

தொடரும்...

2 comments:

  1. அருமை நண்பரே அடுத்த பாகத்தை படிக்க அவளாய் உள்ளேன்

    ReplyDelete
  2. வணக்கம் கமல்,
    கதை இன்னும் 'கரு'வுக்குள் வரவில்லை என்று நினைக்கிறேன். அடுத்த பாகத்தில் வரும் என்று ஆவலாய் காத்திருக்கிறேன். எழுத்து பிழைகளை கொஞ்சம் பார்த்து கொள்ளவும்.

    -
    DREAMER

    ReplyDelete