Thursday, October 21, 2010

இருதிருமணம் பாகம் 5


                     பாகம் 5

பாரதியின் அப்பா அழுதுக்கொண்டே இவர்களை நோக்கி வருவதை பார்த்து பயந்து நிற்க்கிறான் பழனி, அவர் வாய்க்குள்ளேயே புலம்பியபடி

“பயபுல்ல சொல்லாமலே வீட்டுக்கு ஓடிட்டா கொஞ்ச நேரத்துல என்ன கதிகலங்கவச்சிட்டா”

என்று புலம்பிபடிச் செல்ல, பழனி ‘அப்பாடி...’ என்று பெருமூச்சி விட வருண் கண்கள் மூடியப்படி அவன் அக்க கல்யாணம், வாழை மரம் கட்டிக் கொண்டிருப்பது, தோரணம் என தடபுடலாக நடந்தது அவன் கண்ணுக்குள் வருகிறது. பழனி வருணின் தோளில் கைவைக்து

“டேய் அந்த பொண்ண என்னடா பண்ண... சொல்டா” என்று கைகளால் தோளை பிடித்து ஆட்டுகிறான், வருண் கோபமாக

“டேய் நான் ஒன்னும் அவள பண்ணல அவதான் என்கிட்ட வந்து நான் உங்கள காதலிக்கிறேனு சொன்னா”

“அதுக்கு நீ என்ன பண்ண...!”

“ஓங்கி ஒரு அற விட்டு ஏய் உன் ரேன்ஞ்சு என்ன, என் ரேன்ஞ்சு என்னனு சொன்ன அழுதுக்கிட்டே ஓடிட்டா”

“டேய் உன் ரேன்ஞ் என்ன சொல்லு”

“எனக்கு என்ன நான் நல்ல படிச்சிருக்கேன் ரொம்ம ஹைய் லெவல்ல இருக்கேன்”

“நீ ஹைய் லெவல்ல இருக்கியா...! இல்லடா உங்க அப்பாதான் ஹைய் லெவல்ல இருக்காரு”

“எல்லாத்தையும் மறந்திட்டியா உங்க அக்காவுக்கு கல்யாணம் செய்ய சொந்தகாரவுங்ககிட்ட உங்க அப்பா சம்பந்தம் பேசினாரு ஆனா அவுங்க பணம், பொருள் கேட்டதுனால, உங்க அப்பா கோவத்துள வெளி இன மாப்பளையை பார்த்து கல்யாணம் செய்யப்போனதும் கல்யாணம் நடந்தப்போ...”

என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது வருண் கண்களை மூடியப்படியே நினைத்துப்பார்க்கிறான், ஒருவர் முறுக்கு மீசையை வைத்துக்கொண்டு வேட்டியை மடித்துக் கட்டியவாரு நிறைய பேர்ருடன் வந்து வேகமாக

“டேய் ராஜேந்திரா... என்னடா பண்ற வெளி மாப்பளையை கூட்டிட்டு வந்து இந்த ஊருல கல்யாணம் பண்றியா வீடமாட்டன்டா”

என்றுச் சொல்லி கல்யாண பெண்ணை பற்றியும் அந்த குடும்பத்தைப் பற்றியும் தவறாகச் சொல்லி கல்யாணத்தை நிறுத்தி விடுகிறார். சொந்தகார்ர்கள் அனைவரும் சென்றுவிடுகிறார்கள், மாப்பளைவீட்டு காரர்களும் வருண் அப்பாவிடம்  “என்னை மன்னிச்சிடுங்க ராஜேந்திரன் நான் உண்ணும் பண்ண முடியாது இந்த ஊர எதீர்ந்து உங்க பெண்ண கல்யாணம் பண்ண முடியாது” என்று சொல்லி அனைவரும் சென்றுவிடுகிறார்கள். வருண் மனமகள் அறையிலிருந்து புது ஆடையை அணிந்துக் கொண்டும் பவுடர் அதிகமாக முகத்தில் பூசிக்கொண்டும் சிரித்துக்கொண்டு வெளியே ஓடிவருகிறான். கல்யாணமண்டபமே காலியாக இருக்கிறது, அப்பா சோகமாக இருக்கிறார். அருகே அந்த பெரிய முறுக்கு மீசைக்காரர்ரும் நிற்க்கிறார்கள், அம்மா அழுதுக்கொண்டே இருக்கிறாள், அம்மா பக்கத்தில் இரண்டு பெண்கள் சொகமாக நிற்க்கிறார்கள், கல்யாண பெண், மனமகள் கோளத்தில் கண்களில் கண்ணீர்ருடன் ஏதும் அறியாமல் நிற்க்கிறாள். சிறிது நேரம் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள் அனைவரது முகத்தையும் வருண் பார்க்கிறான், திடீர்ரெண வருண் அப்பா கோபமாக

“டேய் பரமநாதா நீ கல்யாணத்தை நிறுத்திட்டினா நான் இதே ஊர்ல சொந்தத்தல வேற மாப்பளையை பாத்து கல்யாணம் பண்ணி வைப்பனு பாக்குறியா மாட்டன்டா”

“வேற என்ன பண்ண முயும் உண்ணால”

“டேய் என்கிட்ட வசதி இல்லணு நினைச்சி பேசாத...”

“அப்பறம்...”

“எனக்கு இந்த ஊரும் தேவயில்ல, சொந்தகாரவங்களும் தேவயில்ல எனக்கு எப்படி என் பெண்களை கல்யாணம் பண்ணிக் கொண்டுக்குனும்னு தெரியும்”

என்று சொல்லி அனைவரையும் அழைத்துக் கொண்டு ஆவேசமாக நடக்கிறார், அப்போது வருணை கூப்பிட்டு அவன் தொளில் கையைப்போட்டப்படியே நடக்கிறார். வருண் கண்களை மூடிக்கொண்டு அனைத்தையும் நினைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறான், அதை பார்த்த பழனி தான் பேசுவதை கவனிக்காமல், கண்களை மூடிக்கொண்டு எதையோ யோசித்தப்படி நிற்க்கிறான் என்று நினைத்து கோபமாக

“டேய் நீ எவ்வளவு சொன்னாலும் திருந்தமாட்டியா...”

என்று திட்டிக்கொண்டே அவன் தோளில் கையை வத்து ஆட்டுகிறான். வருண் கண்முலித்துப் பார்க்கிறான் கண்கள் சோக நிலையில் கலங்கி இருக்கிறது, பழனி மீண்டும் அவனை திட்டுகிறான்.

“டேய் அது எப்படிடா எல்லாத்தையும் மறந்து ‘வண்டி’ வாங்கிதறலனு உங்க அப்பாகிட்டயே கோச்சிக்கிட்டு என் கூட வேலைக்கு வந்த டேய் நீ நல்லா படிச்சி முடித்து வேலைக்கு போனா முதல் மாத சம்பளத்திலே ஒரு வண்டி வாங்கிடலாம்டா”

என்கிறான் பழனி, ஆனால் வருண் அவன் பேசுவதை கேட்டப்படியே ஆள்ந்த சிந்தனையில நிற்க்கிறான், பழனி மீண்டும்

“டேய் நீ வண்டி வாங்கனும்னு ஆசப்பட்டது ஒரு நல்ல விசியம்தான், ஆனா உணக்கு வாங்குனும்னு நினைச்சிருக்க கூடாது உங்க அப்பாவுக்கு வங்கிதற நினைத்தாவது பார்த்துருக்கனும், ஏனா உங்க அப்பா ஊரிலிருந்து வந்து மூன்று வருசமா ஒரு பழைய சைக்கிளை தான் வச்சிருக்காரு...”

என்று பேசிக்கொடே இருக்கும் போது திடீர்ரெண வருண்

“டேய் பழனி எனக்கு ஒரு உதவி பண்றியா”

என்று கேட்டதும் பழனி கோபமாக பேசாமல் நிற்க்கிறான், வருண் சிறுது நேரம் அவன் முகத்தைப் பார்த்து விட்டு மீண்டும்

“டேய் ‘பாரதியை’ பார்த்தா அவதான் என்க்கு மனைவினு சொல்லிடு ஆனா கொஞ்ச நாளைக்கு காத்திருக்க சொல்லு, கடமைகள் இருக்கு...”

என்று பேசிக்கொண்டே நடக்க ஆரம்பிக்கிறான், பழனி உடனே “டேய் எங்கடா போற...” என்று கூப்பிட அவன் காதில் வாங்காமல் மண்டபத்தை விட்டு வேளியேறுகிறான். மனதுக்குள்ளே தெளிவாய் பல விசியங்களை சிந்தித்தப்படியே மண்டபத்தை விட்டு வெளியே நடந்து போகிறான்.

மாலை காற்று வீசிக்கொடுடிருக்கிறது, சூரியன் வடபழனி கோவில் கோபுறத்தில மறைகிறது, அதன் மெல்லி ஒளியும், காற்றும் சேர்ந்து மாலை பொழுதாய் மாற்றிக்கொண்டிருக்கிறது, வருண் தெளிவாண முடிவில் வேகமாக நடக்கிறான், அப்போது பேருந்து நிற்க்கும் இடத்தில் வேலைக்கு வரும் போது பேருந்தில் பார்த்த அதே பெண் பேருந்து நிற்க்கும் இடத்தில் நிற்க்கிறாள், அவள் வருண் வருவதை பார்த்து விடுகிறாள், உடனே அவள் மனதுக்குள்

“இவன் என்னை பார்க்க தான் கஷ்டப்பட்டு தேடி வருகிறானோ...”

என்று நினைத்து அதிர்ச்சியாக பாத்துக்கொண்டிருக்கிறாள் ஆனால் வருண் அவளை பார்க்காமல் தெளிவான மனதோடு உருதியாக நடந்து செல்கிறான், கோவில் கோபுறத்தில் சூரியன் முற்றும் மறைகிறது.

முற்றும்.




3 comments:

  1. என்னங்க கமல்...ரொம்ப ஆர்வத்தோட உங்க தொடர்கதையை படிச்சிட்டு இருந்தேன்..இப்படி ஏமாத்திட்டீங்களே.. மெகா சீரியல்ல..திடீர் திடீர்னு கடைசி எபிசோட்ல எல்லாத்தையும் முடிச்சிடுவாங்களே..அப்படி இருக்கு இந்த எபிசோட்... நீங்க இன்னும் கொஞ்சம் மெனக்கெட்ட நல்ல கதைகள் உங்களால எழுத முடியும்னு எனக்கு தோணுது... பட் இந்த தொடர்...ம்ச் சாரி...

    ReplyDelete
  2. நன்றி பிரியமுடன் ரமேஷ் அவர்களே கண்டிப்பாக நீங்கள் எதிர் பார்க்கின்ற அளவுக்கு நல்ல கதைகளை எழுதுவேன், தொடர்ந்து படியுங்கள் ஆதர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. இது முதல் தொடர்கதை என்பதால், கொஞ்சம் அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். இந்த கதை ஒரு சோதனை முயற்சியென்று எடுத்துக்கொள்ளவும்.

    தொடர்கதை எழுதும் முன் சிறுகதைகளை அதிகம் எழுதிப் பழகவும். அது ஒரு நல்ல பயிற்சி..! பிறகு எழுத்துமுறை வசமாகிவிடும். வாழ்த்துகள்!

    -
    DREAMER

    ReplyDelete